பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

வெவ்வேறு

இத்தகைய கலைகள் மிகுதியாக ஆடல் கலையாகவே நடத்தப் பெறுகின்றன. பாடல்கள் இணையலாம். கருவிகளின் இசை உறுதியான துணையாக அமைகிறது. ஆடலுக்கு வெவ்வேறு இசைக் கருவிகள் இணைக்கப்படுகின்றன. ஆடல்களும் அவற்றுக்குத் தக்கவாறு மாற்றம் பெற்று நடை பெறுகின்றன. கலையில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களுடைய கலைத்திறனால் காண்பவர்களையும் இறைபற்றுக்குள் கவர்ந்து இழுக்கின்றனர். கலைஞரும் காண்போரும் இத்தகைய கலைகளின் முக்கிய நோக்கமான இறைப்பற்றில் ஒன்றிவிடுவதே இவற்றின் சிறப்பாகக் கருதப்படும். வழிபாட்டுக்கு உரிய தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் சிறப்பாகப்

கலைகள்

போற்றப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

தெய்வமேறல்

மிகச்

தெய்வமேறியதால் நடைபெறும் ஆடலையும் பாடலையும் கலைகளுக்குள் சேர்க்க முடியுமா என்பது சரியான வினாவே. கலைகள் மனிதனின் திறமையால் நடத்தப்படுவன. ஆனால் தெய்வமேறல் என்பது மனிதனுக்குள் தெய்வ ஆற்றல் புகுந்து செயல்படுவது ஆகும். நாட்டுப்புற ஆலயங்களில் தெய்வமேறிய ஆடல்கள் மிகப் பரவலாக நடைபெறுவதைக் காணலாம். மனிதன் தெய்வ ஆவேசம் கொண்டு ஆடும் போது அவனைப் பிறர் தங்களைப் போன்ற மனிதனாக மதிப்பது இல்லை. தாங்கள் வணங்கும் தெய்வம் தங்கள் முன் நடமாடுவதாகவே நம்பிப் பணிகின்றனர். ஆடுவோனைச் 'சாமியாடி' என்றே அழைப்பர். அம்மனுடைய அருள் ஏற்று ஆடுபவனை 'அம்மன் கொண்டாடி' என்று கூறி இறைப்பற்றுடன் மதிக்கின்றனர். அவன் ஆட்டம் நீங்கிச் சாதாரணமாக இருக்கும் போதும் அவனிடம் நாட்டுப்புற மக்கள் ஒரு வகையான மதிப்பு வைத்துப் பழகுவதைக் காணலாம். இவ்வகையான ஆடலைக் கலைக்குள் அடக்குவது பொருந்துமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

வெவ்வேறு தெய்வங்களுக்கும் அவற்றிற்கு உரிய கதை களுக்குத் தக்கவாறு ஆடல்கள் நடை பெறுகின்றன. அதை ஊர். மக்கள் மிகவும் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆடலில் கலை வுணர்வு துளிர்க்கிறது. அந்தந்த தெய்வங்களுக்கு உரிய கருவி களைத் (ஆயுதங்கள்) தாங்கிச் சாமியாடிகள் ஆடும் போது ஆட்டத்தில் ஒரு முறையமைப்பு தோன்றுகிறது. அது பார்வைக் குச் சுவையாக அமைகிறது. அத்தகைய ஆடல்களில் இருக்கும் தெய்வவுணர்வை மக்களால் மாற்றிக் காண முடியாவிட்டாலும்