பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

நோன்புகள்

நல்லவை நடக்கவேண்டும் என்றும் நினைத்தவை ஈடேற வேண்டும் என்றும் சில நோன்புகள் நோற்பது வழக்கம். அவைகளை நடத்தும் போது சிலவகையான கலை நிகழ்ச்சிகளை நடத்துவது உண்டு பலவிதமான மரபு முறைகளைக் கொண்டு இவ்விதமான கலைகள் உருவாக்கப்படும். இறையருளை வேண்டுவதினால் இவை சமயச் சார்புடன் இணைக்கப்படு கின்றன.

சிலம்புகழி நோன்பு பண்டைய தமிழ் இலக்கியத்தில் குறிக்கப் பட்டுள்ளது. அதில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளனவா என்பதைப் பற்றி அறிய முடியவில்லை. தமிழ் நாட்டின் தென்பகுதியில் முன்பு பெண்கள் காதுகளை நீளமாக வடித்துப் பொன்னாலான நகைகள் அணிவது. வழக்கம். பொன்னணி பூட்டுவதற்கு முன்பு காதுகள் நன்றாக வடிந்து நீளுவதற்காக ஈயத்தாலான குணுக்குகளை (வளையம்) அணிவது வழக்கம். பெண்கள் ஒரு பருவமடைந்ததும் ஈயக்குணுக்குகளை அகற்றிப் பொன் நகைகள் பூட்டுவர். இதற்குக் 'குணுக்கு கழற்றும் நோன்பு' என்று பெயர். இதனைப் பலர் விழாவாக நடத்திச் நிகழ்ச்சிகளைப் பெண்களைக் கொண்டு செய்வர். இவற்றை இவ்வகையில் இணைக்கலாம். இத்தகைய வழக்கம் இப்பொழுது காது வடிக்கும் பழக்கம் இல்லாமையால் மறைந்து விட்டது.

சிலவகைக் கலை

நவராத்தியை ஒட்டி தஞ்சாவூர் பகுதிகளில் மகர் நோன்பு நடத்தப்படுகிறது. பண்டிகையின் பொழுது வீடுகளில் கொலு வைக்கப்படுகிறது. பின்னர் பெண்கள் தங்களுடைய குழந்தை களுக்குப் பலவிதமான வேடம் புனைந்து நடிக்கச் செய்வர். சு ஏற்றுள்ள பாத்திரங்களின் உணர்வு குழந்தைகள் தாங்கள் களுக்குத் தக்கவாறு நடிக்கப் பழக்கப்பட்டிருப்பார்கள். இளமையில் ஊட்டப் பெறும் கலையுணர்வு அவர்களுடைய பிற் கால வளர்ச்சிக்குப் பெருந்துணையாக அமையும். தஞ்சாவூரில் மகர் நோன்புச் சாவடி ஒன்று உள்ளது. அங்கு பல வீட்டுக் குழந்தைகளும் கூடித் தங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துவர். அதைப் பலர். கண்டுகளித்துச் செல்வது இன்றும் வழக்கத்தில்

உள்ளது.