பலவிதமான
34
கலைகளின் வாழ்விடமாகத் தமிழ்நாடு பண்டைக் காலத்திலிருந்து இன்றுவரை விளங்குகிறது. தமிழர் களுடைய வாழ்வில் கலைகளுக்கு ஒரு முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு மிகச்சிறப்பான கலை வரலாறு இருப்பது அவர்களது பண்பாட்டுச் சிறப்பை நன்கு புலப்படுத்துவதாகும். கலைகள் தமிழர்களுடைய சமுதாய வாழ்வுடன் இணைந்து வளர்ந்துள்ளன. சமயச் சார்புக் கலைகள் மிகுதியாகத் தமிழர்களிடம் காணப்பட்டாலும் அவர்கள் வாழ்ந்து வரும் சமூகத்துடன் ஒட்டிய பல கலைகள் இல்லாமல் இல்லை. அவை வீட்டுக்கு வீடும் இனத்துக்கு இனமும் நாட்டுக்கு நாடுமாக வளர்ந்துள்ளன. மனித வாழ்வை இயன்ற வரை இன்பமாக அனுபவிக்க இத்தகைய கலைகள் பயன் பட்டுள்ளன. இன்றும் அவை நாட்டுப் புறங்களில் மிகச் சிறப்பாக வளர்ந்து உயிர்ப்புடன் காணப்படுகின்றன. மனித வாழ்க்கை யின் பருவங்கள், செய்யும் தொழில், போராற்றல், சமூக நல்வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல விதமான கலைகள் நடைபெறுகின்றன. அவற்றுள் வுணர்வுக் கலப்பு இல்லாமல் இல்லை. இருப்பினும் முக்கிய நோக்கம் கருதிச் சமூகச் சார்புக் கலைகளாகவே அவற்றை ஏற்க வேண்டியதாகிறது.
மனித வாழ்க்கைப் பருவக் கலைகள்
சமய
மனித வாழ்க்கையின் முக்கியமான பருவங்களாக பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றைக் கருதலாம். பெண்ணின் வாழ்வில் பூப்பெய்தலும் சிறப்பாக மதிக்கப் படுகிறது. இப்பருவ நிலைகளைப் பலவிதமான கலைகளால் மக்கள் சிறப்பிக் கின்றனர். பிறந்தவுடன் மகிழ்வுடன் குரலை ஒலி செய்து கொண்டாடுவது இன்றும் பல ஊர் மக்களிடம் காணப்படும் செயலாகும். பின்னர் குழந்தையைப் பெற்ற தாய் தந்தையரை வாழ்த்திப் பாடுவதும் உண்டு. குழந்தைக்கு நல்ல வாழ்வு வாய்க்கவேண்டும். என்று பெண்கள் பாடுவதையும் சில இடங்களில் காணலாம்.
தாலாட்டுப் பாடல்
குழந்தையைத் தொட்டிலில் இட்டு பலவாறாகப் பாடுவது பெண்களின் வழக்கம். முதல் நாள் தொட்டில் கட்டும்போது அந்த நிகழ்ச்சி ஒரு குடும்ப விழாவாக நடத்தப் படுவதும் உண்டு. ஊர்ப் பெண்கள் பலர் கூடித் தொட்டிலை ஆட்டிப் பாடுவார்கள்