பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




35

பாட்டுடன் தொட்டில்

பின்னர் தாயாரால் டப்படும். அப்பொழுது மிகச் சுவையான பாடல்களை அவள் பாடுவதைக் கேட்கலாம்.

செல்வத்துளெல்லாம் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பது உலகக் கருத்து. பிள்ளையில்லாதச் செல்வத்தைக் கள்ளியில் சோறாக மதிப்பர். குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதோர் இறைவனை வேண்டுவது வழக்கம். பிள்ளை பிறந்துவிட்டாலோ மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அவ்வாறு தவமிருந்து பெற்ற குழந்தையை ஒரு பெண் தொட்டிலில் படுக்க வைத்துப் பாடும் பாடலைக் கேட்கலாம்!.

'கண்ணுமணி பொன்னுமணி கந்தருடைய வேலுமணி. வேலுமணி வேணுமென்று வெகுநாள் தவசிருந்தேன் ஆத்துமணல் குவித்துவைத்து அருந்தவசு செய்கையிலே மைந்தனில்லை என்று சொல்லி வேலவர் மடிப்பிச்சைதந்தாரோ ஆத்துமணலில அருந்தவசு செய்கையிலே

பாத்திருந்த பரமசிவன் பாலகனைத் தந்தாரோ'

அரிதாகக் கிடைத்த குழந்தையை அந்தத் தாய் பெரிதாக மதித்துப் பாடுவதைக் காணலாம். முயன்று பெற்றதால் அந்தக் குழந்தைக்குப் பாராட்டும் பராமரிப்பும் மிக அதிகமாக

உள்ளன.

இன்னொரு தாய் தொட்டிலை ஆட்டுகிறாள். குழந்தை அமைதியடையாது அழுது கொண்டே இருக்கிறது. தாய் வருந்துகிறாள். அதை அடக்கி உறங்கச் செய்ய வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடுகிறாள். குழந்தைக்குத் தன் பாடல் புரியுமா புரியாதா என்பதைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை.

‘ஆராரோ! ஆரிராரோ ! உன்னை அடித்தது ஆராரோ?

அடித்தாரைச் சொல்லியழு

ஆக்கினைகள் செய்திடுவோம்!

என் கண்ணே

தொட்டாரைச் சொல்லியழு - என் கண்ணே

தோள்விலங்கு போட்டிடுவோம் !

அம்மா அடித்தாளோ அமுதூட்டும் கையாலே

பாட்டி அடித்தாளோ பாலூட்டும் கையாலே

அண்ணன் அடித்தானோ அணைத்தெடுக்கும் கையாலே அத்தை அடித்தாளோ அதலிப்பூ செண்டாலே '

(1) தாலாட்டுப் பாடல்கள் குமரி மாவட்டத்துத் தாயார் களின் வாயில் கேட்கப் பட்டவை. ஏனைய மாவட்டங் களிலும் இத்தகைய பாடல்கள் உள்ளன.