38
பிறந்த வீட்டுப் பற்றும் பிள்ளைப் பற்றும் இணைந்த தாலாட்டுப் பாடலாக இது விளங்குகிறது. தாயர்கள் தாங்கள் பிறந்த குலத்தை உயர்வாக நினைக்கும் போக்கை இப்பாடலில் காணலாம். இது இயல்பானது. அதனைக் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடலாக உணர்த்துகிறாள்.
வீட்டுக்கு வீடு தவழ்வது தாலாட்டுப்
பாடல். வாய்க்கு வாய் அது மலர்ந்து மகிழ்கிறது. அன்பின் அடியாய்ப் பிறந்து பண்பின் அடியாய் வளர்ந்து இன்பக் கலையாய் இனிது நிலைத்து தமிழரின் நாட்டுப் புறக் கலையின் ஒரு முக்கியப் பிரிவாகத் தாலாட்டுப் பாடல்கள் விளங்கி வருகின்றன.
திருமணப் பாடல்கள்
பலர்
கலை
திருமணம் ஒரு புனிதமான சடங்காக நடத்தப் படுகிறது. கருத்து ஒருமித்து காதல் வயப்பட்டு வாழ்வில் ஒன்றும் இயற்கை முறையை வாழ்க்கை நெறியாகக் கொண்ட தமிழர் காலப் போக்கில் பிறர் பொருத்தம் கண்டு திருமணச்சடங்கின் மூலம் இணைக்கும் மண வாழ்வினை முறையாக ஏற்றனர். முன்னிலையில் இறைவணக்கமும் இனியவர் வாழ்த்தும் கூடிக் கலக்க பல விதமான சடங்குகள் நடத்தி மணம் செய்யத் தலைப் பட்டனர். மணவினையின் பொழுது பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப் பெற்றன. சமூகம் அவற்றைத் தேவை யாகக் கருதி ஒப்புக் கொண்டது. மண வாழ்வை 'ஆயிரங்காலப் பயிர்' எனக் கருதினர். அது காலங்காலமாகத் தொடரும் வாழ்வுக்குத் தகுந்த அடிப்படையாக அமைய. வேண்டும் என்றும் விரும்பினர். இதன் பயனாக நாளை நடப்பது நன்றாக இருக்க வேண்டும் என்று கருதினர். அதற்காக இறையருளை வேண்டினர். இன்ப வாழ்வை நினைத்தனர். சடங்குகளும் கலைகளும் சமூக கடமைகளை உள்ளடக்கி இன்பவாழ்வை நாடி இறைவனை வேண்டுவதாக அமைந்தன.
திருமண நிகழ்ச்சிகளின் ஊடே இனிமையான பாடல்கள் இறை வேண்டுதலாகவும் இன்பத் தூண்டுதலாகவும் பாடப் பெறுகின்றன. பெண்கள் மணமக்களைச் சூழ்ந்து வாழ்த்துவது பெரு வழக்காக உள்ளது. சிறப்பித்தும் பாடுகின்றனர்".
நின்று
மணவினையினைச்
(3) இந்தத் திருமணப் பாடல்கள் நெல்லை, குமரி மாவட்டங்களில் வைகுண்ட சாமியின் வணக்க முறை களைப் பின்பற்றுவோர் பாடுவதாகும்.