பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

பாடல்கள் மிகச்சுவையாகப் பாடப்படுகின்றன. இறையை வேண்டி இனிய வாழ்வை விரும்பி நல்வாழ்த்து தரப்படுகிறது. இத்தகைய திருமண வாழ்த்துப் பாடல்கள் பாடுவது தமிழ் நாட்டிலுள்ள பல இன மக்களின் வழக்கமாக உள்ளது. எதிர் கால வாழ்வு நல்ல முறையில் அமைய வேண்டும் என்ற அனைவ ருடைய நோக்கமும் இப்பாடல்களின் வாயிலாக அறிவிக்கப் படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சில இனத்தினரிடம் திருமணம் நடக்கும் போது பாடும் வழக்கம் இல்லை. ஆனால் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆரத்தி எடுத்துக் கண்ணேறு படக் கூடாது என்ற கருத்தில் பாடும் வழக்கம் உள்ளது. மஞ்சள், குங்குமம் ஆகியவற்றைக் கரைத்த நீரை ஒரு தட்டில் ஏந்தி மணமக்களைச் சுற்றுகின்றனர். அப்பொழுது பாடல் எழுகிறது. ‘ஆலாத்தி ஆலாத்தி ஐந்நூறு ஆலாத்தி முத்தாலே ஆலாத்தி

முன்னூறு ஆலாத்தி

பாக்காலே ஆலாத்தி

பலநூறு ஆலாத்தி

வெத்திலையால் ஆலாத்தி

வெகுநூறு ஆலாத்தி

குங்குமத்தால் ஆலாத்தி கோடி கோடி ஆலாத்தி மஞ்சளால் ஆலாத்தி

மங்கலமாய் ஆலாத்தி'

இவ்வாறு பாடிக் கண்ணேறு சுற்றித் தட்டிலுள்ள நீரைக் கொட்டி விடுகின்றனர். பாடல் கேட்பதற்கு மிகவும் சுவை யுடையது. பெண்களே பாடுகின்றனர். வாழ்க்கை எந்த விதமான குறைபாடும் இன்றி மிகச் சிறப்பாக அமையவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இத்தகைய சடங்குகள் நடத்தப்படு கின்றன.

சுற்றிச் சூழ்ந்துள்ள பெரியவர்களும், சுமங்கலியரும் வாழ்த்தினால் மணமக்களுடைய வாழ்வும் நன்றாக அமையும் என்று மக்கள் நம்பினர். வாழ்க்கையில் கேடுகளும், தீமைகளும் வருவது இயல்பு என்பதை அறிந்துள்ள மக்கள் அவை வராது இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மணப் பாடல்களும்,