பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




43

கணவன் இறந்து விடுகிறான் கலங்கித் தவிக்கிறாள் விதவை யான மனைவி. தனக்கு வாழ்வுறுதியாக இருந்தவன் தன்னைத் துணையற்றவளாக்கிப் பிணமாகி விட்டதைத் தாங்க முடியாது வருந்துகிறாள். மனம் வெந்து புண்ணாகி வெடிக்கிறது, இடி விழுந்த மரமாகி விழுகிறான். விம்மித் துடிக்கிறாள். இனிவரும் நாளை நினைக்கிறாள். வேதனைக் ஒப்பாரி பெருமாரியாகப் பொழிகிறது.

தன்

குரலில்

'கோட்டாற்றுக் கண்டாங்கிக் கொய்துடுக்கும் நாளையிலே வெள்ளைப் புடவையினை வெளுத்துடுக்கும் நாளாச்சே பூச்சூடும் கூந்தலிலே புழுதிபட நேர்ந்தாச்சே பொட்டு வைக்கும் நெற்றியிலே புழுதிபட நேர்ந்தாச்சே தங்கத்துரை மேனிதான் தரையில் விழுந்தாச்சே பொன்னுதுரை மேனிதான் புழுதியில் விழுந்தாச்சே என்னிறகும் முறிந்தாச்சே - அய்யா

நீங்கள் இறந்து போயாச்சே

இன்று கண்ட பூமுகத்தை இனிநான்

என்று காணப் போறேன் அய்யோ !’5

சமூகத்தின் விதிகளுக்குக் கட்டுப்படும் தான் விதவையாகி விட்டதால் ஏற்படும் தீவினைகளை நினைக்கிறாள். பட்டுடுக்க முடியாது. வெள்ளைப் புடவையைக் கசக்கியே கட்ட வேண்டும் கூந்தல் முடிக்கக் கூடாது. பூச் சூட முடியாது. இனி அவளுக்கு இவ்வுலக வாழ்க்கையில் எந்த இன்பமும் அனுபவிக்க இல்லை. கணவன் இறந்ததும் அவள் சிறகிழந்த பறவையாக மாறிவிட்டாள்.

உரிமை

இறப்புச் சடங்கின்போது பல நிகழ்ச்சிகள் நடைபெறும். அவை ஒப்பாரிப் மூலம் வெளிப்படுத்தப் பெறு

கின்றன.

பாடல்கள்

‘பொய்கையிலே நீர்மோந்து பொறந்திடத்துப் பட்டுவந்து பூந்தோப்பு மாலைவந்து பொட்டியிலே பொன்கழத்தி குடும்பத்தார் கைகொடுத்துப்

பூவோடு தீக்கலக்கப் புண்ணியத்தைச் செய்திருந்தாள் வைகையிலே நீர்மோந்து வளர்ந்திடத்துப் பட்டுவந்து மாந்தோப்பு மாலைவந்து மறவையிலே பொன்கழத்தி வளர்த்தார் கைகொடுத்து

மலரோடு தீக்கலக்க மாதவத்தைச் செய்திருந்தாள்"

சுமங்கலியாக ஒரு பெண் இருந்தால் இவ்வாறு பாடப்படுகிறது. ஆனால் கணவன் இறந்து மனைவி வாழும் போது பிறர் (5) குமரி மாவட்டப் பாடல்

(6) இராமநாதபுரம் மாவட்டப் பாடல்.