பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

இம்முறையில் பல வரிகளாக இந்தப் பாடல் நீண்டு கொண்டே இருக்கும். ஆண்களுக்குத் 'தாயாரய்யா. மாதாவே' என்று ஒவ்வொரு அடியும் முடியும் பெண்களை நினைத்துப் பாடும் போது 'தாயாரம்மா மாதாவே' என்ற முடிவைக் கொடுத்துப் பாடுவர். இறந்தவர் வாழ்ந்திருந்தால் தங்களுக்கு நன்மை உண்டு என்று எதிர் பார்த்ததாகவும் இப்பொழுது ஏமாற்றத்துடன் நின்று அழுவதாகவும் பாடுவர்.

'கப்பல் வருமென்று கடல் முகத்தில்

பார்த்து நிற்போம் தாயாரம்மா மாதாவே கப்பல் கவிழ்ந்தவுடன் கடல் முகத்தில் நின்றழுதோம் தாயாரம்மா மாதாவே தோணி வருமென்று துறைமுகத்தில்

பார்த்து நிற்போம் தாயாரம்மா மாதர்வே தோணி கவிழ்ந்தவுடன் துறைமுகத்தில் நின்றழுதோம் தாயாரம்மா மாதாவே 8

பாடல் பலவாறாகப் பல செய்திகளைக் கூறுகின்றன. அவை நாட்டுப்புற மக்களுக்குப் பாடுவதற்கு எளிதாகவும் கேட்பதற்குச் சுவையாகவும் இருப்பதைப் பார்க்கலாம். ஒலி நயத்துக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் பிணத்தை எடுப்பதற்கு முன் பெண்கள் தரையில் பச்சை நெல் பரப்பி உலக்கையால் குத்துகின்றனர். இதற்குப் 'பச்சை குத்தல்' என்ற பெயர் கொடுத்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டும் பாடல்கள்

உள்ளன.

'பிறவூரோர் வந்ததினால் எங்கையா வாசல் பூமிவந்து சேரலையே

போரப் பிரிக்கலையே பொன்னரிசி குத்தலையே

போறவழி காட்டலையே பிறந்தமுறை செய்யலையே மறுவூரோர் வந்ததினால் உங்க வளவில் வந்து சேரலையே மச்சப் பிரிக்கலையே மணியரிசி குத்தலையே

மாற்றுவழி காட்டலையே வளர்த்த முறை செய்யலையே'.9

சென்றதை எண்ணி வருந்தி வருவதை நினைத்து மயங்கிப் பாடும் பாடலாக இது காணப்படுகிறது. அரிசி குத்துவது சிறப்பாகக் குறிப்பிடப் பெறுகிறது.

(8) மேற்படி.

(9) இராமநாதபுரம் செட்டி நாட்டுப் பாடல்.