48
அடைந்துவிட்டாள் என்பதை ஊராருக்கும் உறவினருக்கும் அறிவிக்கும் பொருட்டு அதனை ஒரு கொண்டாட்டமாகச் சிறப்பிப்பது பல சமூகத்தினரிடம் காணப்படும் வழக்கம். நாட்டுப்புற மக்கள் மிகச் அந்த நிகழ்ச்சியை சிறப்பாக மதித்து ஆடல் பாடல்களுடன் கொண்டாடுவதைப் பல இடங்களில் காணலாம். ஆனால் காலப்போக்கில் அத்தகைய கலைக் கொண்டாட்டம் மங்கி மறைந்து வருவதாகவே தோன்று கிறது. பருவமெய்திய பெண்ணின் வீடு உறவினரின் வருகையால் பொலிவுற்றுக் காணப்படும். தினமும் பக்கத்துப் பெண்கள் கூடிக் கும்மியடித்துப் பாடும் பழக்கம் தமிழ்நாட்டில் பல ஊர்களில் இருந்தது. அவர்கள் ஒரு விளக்கைச் சுற்றி சுற்றி வந்து பெண்ணின் நலனைக் குறித்தும் இறையருளை வேண்டியும் பாடியாடுவர். அது இன்பக் களியாட்டமாகவே நடைபெறும்.
இத்தகைய பூப்பெய்தல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சில பழங்குடி மக்களிடையே மிகச் சிறப்பாக நடைபெறுவதாக அறிய முடிகிறது. மேல் நாடுகளிலும் களிப்பூட்டும் கலை நிகழ்ச் களுடன் கொண்டாடப்படுகிறது. அர்ஜெண்டினாவில் புயெல்சி (Puelche) துயெல்சி (Tehuleche) ஆகிய கலை நிகழ்ச்சிகள் அப்பொழுது நடத்தப் பெறுகின்றன. கிழக்குப் பிரேசிலில் புல்னியோ (Fulnio) நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. அந்தக் கலைநிகழ்ச்சிகள் மூலம் ஒரு பெண் தன் வாழ்க்கைக்காக அறிய வேண்டிய மிக முக்கியமான செய்திகள் குறிப்பாகத் தெரி விக்கப்படுகின்றன. கலைகள் மூலம் களிப்பை அடைவதோடு மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பல முக்கிய கருத்துகளையும் அறியும் வாய்ப்பைப் பெறுகிறான் என்பது குறிப்பிடத்தகும் உண்மையாகும். பொழுது போக்காகத் தோன்றும் நாட்டுப்புறக் கலைகள் வாழ்வை வளப்படுத்தும் அறிவு ஊற்றாகவும் விளங்குகின்றன. இடத்துக்கு இடம் கலைகள் மாறினாலும் வாழ்க்கைப் பருவங்களைக் கொண் டாடும் கலைகள் நோக்கத்திலும் பயனிலும் சிறப்பான ஒற்றுமை உடையனவாக் காணப்படுகின்றன.
கொடும்பாவி கொளுத்தல்
மக்கள் சிறப்புற்று வாழ மழை தேவை. வானம் பொய்த்து விட்டால் மண்ணுலக வாழ்வு பாழாகி விடும். சில சமயம் கால மழை பொழியாது பஞ்சம் மக்களை வாட்டும். அதை இறையின் கோபமாகக் கருதும் மனிதன் அதிலிருந்து விடுபட சில முறைகளைக் கையாளத் தலைப்டுகிறான். அம்முறைகளில் ஒன்றாகக் கொடும்பாவி கொளுத்தும் சடங்கு நடைபெறுகிறது.