பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




49

நாட்டுப் புற மக்களில் சிலர் இதனைச் செய்வர். அனைவரின் ஆதரவும் இதற்கு உண்டு. மக்கள் செய்த பாவச் செயல்களின் உருவகமாகக் கொடும்பாவியின் உருவம் செய்யப்படுகிறது. இதைச் செய்ய மூங்கில், வைக்கோல், கந்தல் துணி ஆகிய வற்றைப் பயன்படுத்துகின்றனர். அந்த உருவத்தைத் தெருத் தருவாக இழுத்துக் கொண்டு வருவர். ஒவ்வொரு வீட்டின் முன்னரும் அது நின்று நின்று போகும். இருவர் அல்லது மூவர் கொடும்பாவியைக் கோல் கொண்டு அடிப்பர். பலர் சூழ்ந்து வருவர். அடிபட அடிபட ஊரினர் செய்த பாவம் தொலைவதாக மக்கள் நம்புகின்றனர். வீட்டுக்கு வீடு தேய்காய், நெல், பணம் ஆகியவற்றைத் தங்கள் தகுதிக்குத் தக்கவாறு கொடும்பாவி அடிப்போருக்குக் கொடுப்பார்கள். அதனை இழுத்தவாறு அடிக்கும் போது சிலர் ஆடுவர் சிலர் பாடுவர். பாடல் பாவத்தின் தொலைவு பற்றியதாகவும் மழை பெய்ய வேண்டுவ தாகவும் அமையும்.

'வரப்போ தலையணை வைக்கோலோ பஞ்சு மெத்தை மேற்கே மழை கறுக்க கிழக்கே மழை பெய்ய கொடும்பாவி சண்டாளி

அத்தரசி பாஞ்சாலி கொடும்பாவி சண்டாளி

செத்தாலும் பேரெடுப்பேன் சேலைவாங்கிப் போட்டழுவேன் - கொடும் பாவி சண்டாளி

மாண்டாரென்று பேரெடுத்தால் மாலைவாங்கிப் போட்டழுவேன் கொடும்பாவி சண்டாளி

-

பன்னிரண்டு வருடம் பாதமழை பொழியாமல் -அத்தரசி பாஞ்சாலி

இருப்புவொரு வருடம் இருந்துமழை பொழியாமல் -அத்தரசி பாஞ்சாலி

முன்காட்டி கொள்ளிவைக்க மூத்தமகன் நாசுவன் –அத்தரசி பாஞ்சாலி

பின்காட்டி கொள்ளிவைக்க பிறந்தமகன் நானாகும் -அத்தரசி பாஞ்சாலி'

இந்த முறையில் பாடல் பல அடிகளாக நீண்டு

செல்லும். பலமுறை திருப்பித்

முழுவதும்

கொண்டே

பேச்சாகவே

திருப்பிப் பாடுவர். ஊர்

அன்று கொடும்பாவி கொளுத்தும்

இருக்கும். பாடலுக்கு இடையே,

'கொடும்பாவி செத்து நெடுந்தூரம் போயிட்டான்

இனிப்பெய் மழையே இனிப்பெய்'

என்ற அடிகள் அடிக்கடிக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

BIT-4