53
'இளையண்ணன் வீடதிலே ஏழுநாளாத் தெய்வக் கொடை எல்லாரும் போறாங்க ஒக்கரையும் பிள்ளையுமாய் நான்பாவி போறேனே வெற்றிலையும் கையுமாய் தம்பிபெற்ற தாய்மார்கள் தள்ளிநில்லு மலடி என்பர் பிள்ளைபெற்ற தாய்மார்கள் பின்னேநில்லு மலடி என்பர்!
ஒரு பெண்ணின் உணர்வு சமுதாயப் பின்னணியில் உடைத்துக் காட்டப் படுகிறது. பிள்ளை பெறாதவள் அன்னை அல்லள். அவளைச் சமுதாயம் மதிப்பதும் இல்லை. சமமாக கொள்வதும் இல்லை.
ஏற்றுக்
ஒரு பெண்ணும் ஆணும் மாறிமாறிப் பாடும் பாடலும் ஊஞ்சலாட்டத்தில் இடம் பெறுகிறது. ஒரு பகுதியை 'ஒருத்தி பாட அடுத்ததை இன்னொருத்தி பாட அது நாடகத் தன்மை பெற்று கலைநயத்துடன் வெளிவருகிறது. பாடலைக் கேட்பதே இன்பம்.
'ஆண்: ஆற்றுக்கு அந்தப்புரம் ஆடுமேய்க்கும் பெண்மயிலே ஆற்றிலே வெள்ளம் வந்தால் நீ என்ன செய்வாய்? பெண் : ஆற்றிலே வெள்ளம் வந்தால் அழகான கப்பல் செய்து அதிலே நான் வருவேன் பாராய்!
ஆண் :
பெண் :
ஆண் :
அழகான கப்பல் செய்து அதிலே நீ வந்தால்
நண்டு வடிவம் நானுங்கொண்டு நறுக்கிடுவேன்.
நண்டு வடிவம் கொண்டு நறுக்குவாயானால்
எலியின் வடிவம் கொண்டு இறப்புவழிப் பாய்ந்திடுவேன் எலியின் வடிவம் கொண்டு இறப்புவழிப் பாய்ந்தா
யானால்
பூனை வடிவம் கொண்டு பிடித்திடுவேன் எலியை பெண் : பூனை வடிவம் கொண்டு எலியைப் பிடித்தாயானால் ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரே பறந்திடுவேன். ஆண் : ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரே பறந்தேயானால் செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய்த்
தூக்கிடுவேன்.
பெண் : செம்பருந்து வேடங்கொண்டுய்த்
ஆண் :
தூக்கினாயானால்
பூமியைக் கீறிக்கொண்டு புல்லாய் முளைத்திடுவேன். பூமியைக் கிறிக்கொண்டு புல்லாய் முளைத்தாயானால் காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அப்புல்லை