பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முனைவர் சா. கிருட்டினமூர்த்தி

இயக்குநர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை-600 113.

அணிந்துரை

கலைகள் மனிதனை மகிழ்விப்பன; உணர்வுகளுக்கு ஊக்கம் அளிப்பன. இக்கலைகள் உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்துவதோடு அமையாமல் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு விளக்கங்களாகவும் அமைகின்றன. மனிதன் பண்படும்போது, அவனது கலை வெளிப்பாட்டிலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். போட்டி, பூசல் நிறைந்த இவ்வுலகில் தன் திறமைகளுக்கேற்றவாறு கலைகளை உருவாக்கும் நிலை மனிதனுக்கு இருந்தது. இத்தகு நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு உணர்ச்சிகளின் வடிகாலாக அமைந்துள்ளன. உண்மை உணர்ச்சிகளின் வெளியீடாக நாட்டுப்புறக் கலைகள் அமைவதால் அவை மக்களைப் பெரிதும் கவர்ந்து வருவதை நாம் காண முடியும்.

அதனை

இந்நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. கலையின் தோற்றம், வெளிப்படுத்துவோர், அதனை வெளிப்படுத்தப் பயன்படும் பொருள்கள் போன்ற பல காரணங்களைக் கொண் கலைகளை வகைப்படுத்திக் காட்டுவர். இவை சமூகச் சார்பு கலைகளாகவும், வழிபாட்டுக் கலைகளாகவும், தெய்வமேறிய கலைகளாகவும், தொன்ம விளக்கக் கலைகளாகவும்

அமைப்புக்

, நாடக

வகையாக

பல்வேறு கலைகளாகவும் அமைந்துள்ளதை இந்நூலாசிரியர் தெளிவுபட எடுத்துக் கூறியிருப்பது இந்நூலிற்குச் சிறப்புச் சேர்ப்பதாகும்.

நம்முடைய பண்டைக் கலைகள் போற்றப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். நம்முடைய கலைகளைப் பாதுகாப்பதால் நாம் நம்முடைய பண்பாட்டையும் பாதுகாக்கிறோம். - பண்பாட்டு விளக்கக் கருவூலங்களாக அமையும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களுடைய வாழ்வில்