பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




57

இயற்கையாகவும் அமைவதைத் தொழில்கள் தொடர்பான கலைகளில் காணலாம். இவை பொழுது போக்காக அமைந்து தொழிற் கல்வியின் பயனைச் செய்வதாகவும் கூறலாம். தேவை கருதி சில சமயம் மந்திர நிகழ்ச்சியாகவும் அமைத்து விடுகிறது. செய்தொழிலின் உயர்வை உணர்ந்தே மனிதன் அதனை இன்பக் கலைகளாக உருவாக்கி மகிழ்கிறான்.

வேட்டையாடுதல் தொடர்பான நடனங்கள் மனிதன் உயிரினங்களைக்

கொன்றுதின்னும்

பழக்க

முடையவன் மேலும் கொடிய விலங்குகள் தன்னைத் தாக்கிக் கொன்றுவிடாது காக்க வேண்டிய பொறுப்பும் உடையவன் ஆகையினால் வேட்டையாடுதலை ஒரு முக்கிய தொழிலாகக் கொண்டான். அதனைத் தொடர்பாகவுடைய சில கலைகளும் உருவானது. வேட்டை நடனங்கள் உலகின் பல பகுதிகளில் நடை பெறுகின்றன மிருகங்களை மயக்கும் ஆற்றலும், கவரும் உத்தி களும் அந்நடனங்களில் கையாளப் படுகின் றன. சில இடங்களில் மிருகங்களின் ஆவிகளை ஆறுதல் படுத்தும் நம்பிக்கையிலும் கலைகள் நடத்தப்படுகின்றன. 18 மிருகங்களைப் போன்று செயல் படல், வேட்டைக் குறிப்புகள் காட்டி நடித்தல் மந்திரச் செயல்கள் ஆகியவை கலைகளில் இடம் பெறுகின்றன. தமிழ் நாட்டிலும் பல வேட்டை நடனங்கள் நடந்துள்ளன. கலை களில் மிருக வேட்டைக் காட்சிகள் முக்கியமான இடம் பெற் றுள்ளன. குறவஞ்சி நாடகங்களில் மிருக வேட்டை ஒரு காட்சி யாக விளக்கப்படும். குளுவ நாடகம் பறவை வேட்டையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கலையாகும்.

ஆப்ரிக்காவில் யாமசௌக்ரோ ஆன்றிலோப் நடனம் (Yammasoukro Antelope Dance) இரு புனித வேட்டையரைக் கொண்டு ஆடுவதாகும். இதனைத் தமிழரின் குளுவநாடகத் துடன் ஒப்பிட்டுக் காணலாம். இதில் வரும் குளுவன், சிங்கன் ஆகிய இரு வேட்டைக்காரரும் புனிதத் தன்மையுடையவராகக் காட்டப்படுவது குறிப்பிடத்தக்க உண்மையாகும். தென் அமெரிக்கா நாடுகளின் சில பகுதிகளில் விசுனா வேட்டை (Viucuna Hunt) ஒரு கலை நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மெக்சிக்கோவிலும் வேட்டை நடனங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் முண்டர்கள் நடத்தும் சாத்ரா விழாக்களிலும் இலங்கையில் வேடர்கள் நடத்தும் அம்பு நடனத்திலும் Mythology and Legend,

(13) Maria Leach, (Ed) Folklore

New English (Library London, 1975), P. 278.