பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

சில

வேட்டைக் காட்சிகள் இடம் பெறுவதைக் காணலாம். நடனங்களில் மிருகவுருவங்களை மனிதன் தாங்கி வேட்டைக் நடித்துக் காட்டுவதையும் காணலாம். தமிழ் நாட்டிலும் இத்தகைய வேட்டை நடனங்கள் சில நடைபெறு கின்றன

காட்சிகளை

சிண்டு நடனம்

பாண்டிச் சேரியை அடுத்து வாழும் பழங்குடி மக்களான கரையர், கல்லயர், குருவிக்காரர் ஆகிய இனங்கள் விழாக் காலங் களில் சிண்டு நடனம் ஆடுகின்றனர். இது ஒரு வகை வேட்டை நடனம் ஆகும். இந்த இனமக்களின் முக்கியமான தொழில் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடித்தல். இத்தொழிலை நடனக் காட்சிகளாக ஆடிக் காட்டுகின்றனர். பல விதமான இசைக் கருவிகளின் இணைப்புடன் பாடல்களைப் பாடி அவற் றிற்குத் தக்கவாறு ஆண்கள் ஆடிக் களிக்கின்றனர். பறவை களைப் பொறி வைத்தும், கண்ணி பரப்பியும் எவ்வாறு பிடிப்பது என்பதை நடனத்தின் மூலம் சுவையாகக் காட்டுகிறார்கள். காட்சிகள் ஒரே சமயம் மக்களுக்கு இன்பத்தையும் தொழில் பயிற்சியையும் அளிப்பதை அறிய வேண்டும்.

நடனத் தலைவன் பாடலின் ஒரு அடியைப் பாடியதும் பிறர் கூட்டாக அதனைப் பாடுவர். நடன அசைவு துரிதமாகவும் பல்வேறு வகையாகவும் அமையும். கால்களின் அசைவுகளை மிகுதியாக உடையது. தாளமும் இசையும் இத்தகைய அசைவு களுக்கு நல்ல துணையாக அமைகின்றன. அறிவுமிக்க ஆட்டமாக சிண்டு நடனம் தோன்றுகிறது. இதே போன்று பறவை பிடிக்கும் வேட்டைக் குறிப்புகள் நிறைந்த குளுவ நாடகத்தைப் பற்றிப் பின்னர் கூறப்படும் நாட்டுப்புற நாடகக் கலைப் பகுதியுள் விளக்கமாகக் காணலாம்.

புலி வேடம்

பல

தமிழ் நாட்டில் வட மாவட்டங்களில் புலி வேடம் இடங்களில் ஆடப் படுகிறது. ஒரு மனிதன் புலிமுகம் அணிந்து கொண்டு தன் உடம்பு முழுவதும் புள்ளிகள் பொறித்துத் தன்னைப் புலியாக மாற்றிக் கொள்கிறான். வாயில் கோரைப் பல்லும், பின்புறம் புலிவாலும் அணிகிறான். அவரைப் பார்த்தால் பிறர் புலியென்று அடையாளம் காணும் அளவுக்கு