60
வருவர். கூடுதல் பரிசு பெற அது ஒரு தூண்டுதலாக அமையும். புலி வேடமும், கடுவாய் ஆட்டமும் கொடிய விலங்குகளிட மிருந்து மக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தகுந்த பயிற்சியளிக்கும் கலைகள் என்று கருதலாம். அச்சம் போக்கி வீரம் கொடுக்கும் கலையாகவும் இவை விளங்குகின்றன.
ஒரு
மழையில்லாத பஞ்சகாலத்தில் கடுவாய் ஆடுவதை நோன்பாகக் கருதித் தென் மாவட்டத்து இந்துக்கள் ஆடுவதாக வும் தெரிகிறது. பல விதமாக விரத முறைகளைக் கையாண்ட வர்களே இந்த ஆட்டத்தில் பங்கு கொள்ளவேண்டும் என்று நம்பினர். இந்த ஆட்டம் நடந்த பின் மழை வரும் என்று மக்கள் நம்பினர். கொடுமையின் உருவகமாகக் கடுவாயை நினைத்து அது கொல்லப்பட்டதும் ஊர்ப்பாவம் தொலைந்து மழை பொழியும் என்று நம்பினரோ என்னவோ அறிய முடிய வில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்துள்ளது. இந்த நம்பிக்கையில் இவ்வாடலை ஒரு புனிதச் சடங்காகப் பல இடங்களில் நடத்தியுள்ளனர். இந்துக்களில் இந்த
ஆட்டம்
ஆடுவோர் குறிப்பிட்ட பழக்கமுடன் இருந்ததாகத் தெரிய வில்லை. நோன்பு இருப்பவர் யாரும் ஆடலாம் என்ற பழக்கமே இருந்துள்ளது.
முஸ்லீம்கள் முகரம் பண்டிகை நடக்கும் போது பலவித நோன்புகள் காத்து இந்த ஆடலில் ஈடுபடுகின்றனர். அது ஒரு சமயச் சடங்காகவே மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆட்டம் பல இடங்களில் நடைபெற்ற பின் குறிப்பிட்ட நாளில் தீக்குழி பாயும் விழா நடக்கும். அது மிகவும் புனிதச் செயலாகக் கருதப்படும். குமரியிலும் தஞ்சையிலும் முஸ்லீம்கள் இத்தகைய ஆடலை மிகவும் புனிதமாகக கருதி ஆடுவதாக அறிய முடிகிறது. தஞ்சையில் முகரப் பண்டிகை ஊர்வலத்தின் போது கடுவாய் ஆட்டத்துடன் மயிலாட்டமும் நடப்பதாகக் கூறப்படுகிறது. கவரத்தக்க ஆடையணிகளுடன் இந்த ஆடல்கள் நடக்கும்.
மெக்சிக்கோவிலும் ஜகுவர் (Jaguar) என்ற பெயரில் கடுவாய் ஆட்டம் நடைபெறுகிறது. தென் அமெரிக்காவிலும் இத்தகைய ஆடல் நடப்பதாக அறிய முடிகிறது. இவ்வாடல் மிகுதியும் சமூகத் தொடர்பு உடையதாகவே தோன்றுகிறது. வேட்டை யாடல் தொழிலே இதற்கு அடிப்படை உணர்வைக் கொடுத் திருக்க வேண்டும். பின்னர் சமய உணர்வு அதனுடன் கலந்திருக்கலாம்.