61
பகல் வேடம்
சாதாரண மக்களின் தொழில் முறைக்கலையாகப் பகல் வேடம் உள்ளது. இது வட மாவட்டங்களில் மிகப் பரவலாக நடைபெறுகிறது. பலவிதமான வேடங்களையும் புனைந்து ஏழை மக்கள் வீடுவீடாகச் சென்று பரிசுகளையும் பொருள் களையும் பெற்றுச் செல்வது வழக்கம். பலர் பல வேடங்களைப் பூண்டு கூட்டமாகச் செல்வர். கடைகளுக்கு முன்னால் பலர்காண இவர்களுடைய ஆடல் நடைபெறும். ஆண்களே பெண் வேடம் புனைவர் இவர்கள் பல வேடங்களைப் பூணுவதால் சில இடங் களில் இவர்களைப் பல வேடக்காரா என்று கூறுவர். பரிசில் தரும் வீட்டாரைப் பலவாறு புகழ்ந்து பாடுவது இவர்களுடைய வழக்கம்.
கலையை விடவும் கலைஞருடைய பிழைப்பே முக்கியமான தாகக் கருதப்படும். ஆகையினால் இக்கலையின் சிறப்பு மிகவும் குன்றி விட்டது. இப்பொழுது இத்தகைய கலை மங்கி மறையத் தொடங்கி விட்டது.
றுமிக் கோமாளிஆட்டம்
பொங்கல் அல்லது அதனை அடுத்த இருதினங்கள் உறுமிக் கோமாளி ஆட்டம் நடத்தப் படும் இதில் வரும் ஒரு கோமாளி யின் ஆடல் மிகவும் முக்கியமானது. அவன் பளபளப்பான வண்ண ஆடைகளைக் கட்டிக் கொண்டு நகைச் சுவை ததும்ப ஆடுவான். அவனுடைய ஆடையின் பலபகுதிகளில் குஞ்சங்கள் அழகாகத் தொங்கிக் கொண்டிருக்கும். தலையில் ஒரு வண்ணக் குல்லா வைத்திருப்பான் அதன் நுனி நீண்டு காணப்படும். அதில் ஒரு குஞ்சம் தொங்கும். அவன் விதவிதமாகச் செய்யும் வேடிக்கை கள் மக்களைக் குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கும்.
கோமாளிக்குத் துணையாகச் சிலர் ஆடுவர். அவர்கள் இடுப்பில் பாவாடை கட்டிக் கொண்டு மேலே சட்டை அணிந்து இருப்பர். உறுமாறும் கட்டிக் கொண்டு வருவர். கழுத்தில் ஒரு நீண்ட அங்கவஸ்திரத்தைச் சுற்றிப் போட்டிருப்பர். அது அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும். இவர்களுடைய இசைக் குழுவில் ஐந்து பேர் இருப்பர். ஐந்து துளைகளுடைய புல்லாங் குழலும் தாதாப் பல ைகயும் (கஞ்சிரா) அவர்கள் பயன் படுத்தும் முக்கிய இசைக் கருவிகள். அதில் ஒரு வளைந்த கம்பியை உரசி ஒலி எழுப்புவர். உறுமி உறுமி ஒலிப்பதால் அது உறுமி மேளமாகியது. அதன் இசையை முக்கியமாகக் கொண்டு