பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




63

தன்னைப் பகைத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற மனிதன் முயல்கிறான். முற்காலத்தில் மனிதனை மனிதன் புரியாமல் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடியிருக்கின்றனர். குழுக் களும் இனங்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு மோதியழிந் துள்ளதை உலக வரலாறு படம் பிடித்துக் காட்டும். காலத்தின் இயல்பு மனிதனைப் போர்ப் பயிற்சியில் ஈடுபடத் தூண்டி யுள்ளது. ஒருவனுடைய உயர்வும் பெருமையும் அவனுடையப் போராடும் திறமையைக் கொண்டு கணிக்கப் பெற்ற காலநிலை யும் இருந்தது. அந்தக் காலப் பகுதியை வீரயுகமாகக் குறிப் பிட்டனர். வீரனை அனைவரும் மதித்துப் போற்றினர் வீரச் செயல் புரிந்தவன் இறைநிலைக்கு உயர்த்தப் பட்டான். அவனுடையீவீர மரணம் அனைவராலும் மதிப்புடன் போற்றப் பட்டன. போரில் மடிந்தவன் 'வீரசுவர்க்கம்' புகுந்து சிறப் படைவான் என்று அனைவரும் நம்பினர்.

தமிழ் நாட்டில் மாத்திரமன்றி உலகில் பல இடங்களில் வீர வணக்கம் நடைபெற்றன. ஐரோப்பாவின் ஸ்காண்டி நேவியா வில் வீர வணக்கம் 'ஒடின்' (Odin) என்ற பெயரில் நடை பெற்றன. இறந்த வீரர்கள் 'வல்ஹல்லா' என்று அழைக்கப் படும் வீரர்கள் வாழும் துறக்கத்துக்குச் சென்று பலவகையான வசதிகளுடன் வாழ்வதாக மக்கள் நம்பினர். அவர்களை வழிபட்டு வணங்கினர். அவர்கள் நினைவாக வீரக்கல் நட்டுச் சிறப்பித்தனர். ஆண்டு தோறும் கல்நிறுத்திய இடத்தில் விழா வெடுத்து. அவர்களுடைய புகழைப் பாடினர். தமிழ் நாட்டில் அத்தகைய வீரர் நினைவுக் கற்களை நடுகல் என்று அழைத்தனர். அதிலிருந்துதான் இறந்தோருக்குக் கல்லெடுக்கும் வழக்கம் வந்திருக்க வேண்டும். வீரச்செயல் புரிந்து தன்

ஆண்மையினை உலகுக்கு அறிவிக்க க அ அனைவரும் விரும்பு

கின்றனர்.

உலக வீரர்கள் பல முறைகளில் தங்கள் திறமையைக் காட்ட முயல்கின்றனர். உடல் வலிமையுடையவர் அடிபிடியிலும், குத்துச் சண்டையிலும் காட்டுகிறார்கள். இந்தத் திறமை யிலிருந்து மல்யுத்தம், மல்லாடல் ஆகியவை கலைகளாக வளர்ந் துள்ளன. பலவிதமான உத்தி முறைகளைக் கையாண்டு இந்தக் கலையைத் திறமையுடன் மக்கள் வளர்த்துள்ளனர். மற்போர் போட்டிகளும் மல்லாடல் நிகழ்ச்சிகளும் பல இடங்களில் நடந்து மக்களைக் கவர்ந்துள்ளன.