68
மஞ்சு விரட்டுக்காகவே காளைகள் தனியாக வளர்க்கப்படும். கொம்புகள் கூர்மையாகச் சீவிவிடப்பட்டிருக்கும். சுற்றிலும் பாதுகாப்புள்ள பரந்த வெளியில் காளையை விட்டு விடுவர் அதனை ஓர் ஆண் மகன் அடக்கவேண்டும். சில ஊர்களில் காளையை ஒரு நீண்ட வடத்தால் கட்டிப் பிடித்திருப்பர். காளைகளைப் பட்டுத் துணியால் ஒப்பனை செய்தும் இருப்பர். காளையை அடக்கி விட்டால் பணம் பரிசாகக் கொடுக்கப்படும். காளையின் கொம்பில் பணத்தைப் பையில் வைத்துக் கட்டிவிடும் பழக்கமும் உண்டு. நாணயத்தைச் சல்லி என்று. கூறும் பழக்கத்தைக் கொண்டு இதற்குச் 'சல்லிக்கட்டு' என்ற பெயர் வந்திருக்கலாமா என்பதைச் சிந்திக்கலாம்.
காளையை அடக்குபவர் மிகத் திறமையாக அதன் பக்கத்தில் சென்று கூர்மையான கொம்புக்குத் தப்பிப் பிடிக்க வேண்டும். மாட்டின் திமிலைப் பற்றி முகத்தை வளைத்து அதை நிலை தடுமாறச் செய்து வீழ்த்தி விடுகிறார்கள், பிடிதவறி விட்டால் மாட்டின் கொம்பு குடல் மாலை சூடி அந்த இடத்தைக் குருதி குளமாக மாற்றிவிடும். அவ்வாறு பலியாகும் வீரர்கள் பலர் உள்ளனர். வீர விளக்கக் கலையாகவே சல்லிக்கட்டு நடைபெறு கிறது. பண்டைக் காலத்தில் கன்னியரின் காதல் கரம் பற்றவும் இத்தகைய வீர நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
பண்டை நாளில் ரோம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் வீரர்கள் சிங்கத்துடன் போராடும் காட்சிகளை மக்கள் கண்டு களித்துள்ளனர். வீரர்களை கிளாடியேட்டர்ஸ் (Glalators) என்று அழைத்துள்ளனர். தமிழ் நாட்டில் புலியுடன் மல்லாடி அதைக் கொன்று தன் வீரத்தை நிலை நாட்டிய தீரர்கள் உண்டு. புலியைத் தன் திறமையால் கொன்று தன் வீரத்தை நிலை நாட்டிய ஒருவரை இன்றும் மக்கள் புலியடி இராமசாமி (தெங்கம்புதூர், குமரிமாவட்டம்) என்றே சிறப்பாக அழைக் கின்றனர். புலி போன்ற மிகக் கொடிய மிருகங்களுடன் போராடுவதை மகிழத் தக்க நிகழ்ச்சியாகத் தமிழ் நாட்டில் எந்தப் பகுதியிலும் நடத்தியதாகத் தெரியலில்லை. காளை வலிமையுடையது. ஆனால் கொடியது அல்ல. மனிதனின் வலிமையையும் வீரத்தையும் கண்டறியும் வீர நிகழ்ச்சியாகச் சல்லிக் கட்டைத் தமிழ் மக்கள் நடத்தி வருகின்றனர்.
சேவல் போர்
மனிதனின் வெறி கொண்ட ஆவலினால் சில இடங்களில் சேவல் போர் நடத்தப் படுகிறது. போர்க் கோழிகளைத் தனியாகத் தெரிந்தெடுத்து குறிப்பிட்ட இரை கொடுத்து