வழிபாட்டுக் கலைகள்
வழிபாடும் கலைகளும்
இறையுணர்வு உடையவர்கள் கடவுளுக்கு வழிபாடு செய்ய விரும்புவது இயல்பு. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் விருப்பத் துக்கும் நம்பிக்கைக்கும் தக்கவாறு வழிபாடு செய்து வருகிறார் கள். தனது அறிவும் உணர்வும் இழுத்துச் செல்லும் முறைகளில் எல்லாம் இறைவனை நினைத்து வழிபட மனிதன் முயல்கிறான். கலைகள் மனிதனின் நுண்ணறிவின் கண்டுபிடிப்புகளாக விளங்குகின்றன. அவற்றைக் கொண்டும் வழிபாடு செய்யலாம் என்று மனிதன் கருதுகிறான். அனைத்துக் கலைகளையும் அவ்வாறு பயன்படுத்தினாலும் சிலவற்றை அதற்காகவே இயற்றியுள்ளதாகத் தோன்றுகிறது. அவற்றை வழிபாட்டுக் கலைகளாகக் கருதி விளக்கம் காணலாம்.
காவடியாட்டம்
முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகத் தமிழ் நாட்டில் காவடியாட்டம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. முருகனை வாழ்த்தியே காவடியெடுத்து ஆடுவர். பலவிதமான நோன்பு கள் செய்து முருகன் கோயிலுக்குக் காவடியெடுத்துச் செல்வர். காவடி ஒரு குறுந்தடியால் செய்யப்பட்டிருக்கும். அதன் இரு முனைகளையும் இணைத்து மேல் நோக்கி வளைந்த அமைப்பில் கட்டியிருப்பர். அதனை மயிற்பீலி, மலர் மாலைகள் ஆகிய வற்றால் ஒப்பனை செய்திருப்பர்.நடுப்பகுதியில் ஒரு வேல் மேல் நோக்கிக் கட்டப் பெற்றிருக்கும். வண்ணத் துணிகளையும் சுற்றியிருப்பர். சிலர் முருகனின் படங்களை இரண்டு பக்கங் களிலும் பொருத்திக் கட்டியிருப்பர். பலவிதப் பொருட்கள் காவடியின் இருமுனைகளிலும் கட்டித் தொங்கவிட்டிருப்பதையும் காணலாம். ஒப்பனை செய்யப் பட்டுள்ள காவடி அழகின் கொலுவிருப்பாகவே இருக்கும்
நையாண்டி மேளம் போன்ற வாத்திய இசை முழக்கப்படும். காவடி தூக்குவோருக்குத் தன்மேல் இறையேறிய உணர்வு தோன்றும். அவர் அத்தகைய உணர்வு மிக்கவராக மாறித் தன்னை மறந்து ஆடத் தொடங்குவார். மேள இசை உச்சநிலை அடைய அடைய அவரது ஆட்டமும் கூடிக் கூடி வேகநிலை அடையும். அனைவரும் முருகனை நினைத்து 'அரோகரா,