பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

தரையில் வீசப்படும் பணத்தைக் கை கொண்டு எடுக்கும் போது தலையிலிருக்கும் கரகம் இருப்பு நழுவாது தாங்கப்படுவது வியப் பாகத் தோன்றும். குடத்துக்கு மேல் குடமாகப் பல குடங்களை அடுக்கி ஆடுவதும் உண்டு. தலையில் ஓர் உலக்கையை நிலையாக நிறுத்தி அதன் உச்சியில் தீச்சட்டி வைத்தும் ஆடுவர். தலைமுடியில் தீப்பந்தங்களைக் கட்டிச் சுழன்று ஆடும் காட்சி கண்ணுக்கு இனிய விருந்தாகும். அது அச்சம் மூட்டுவதாகக் தோன்றும். வேகமே அதன் வெற்றிக்குக் காரணமாக

அமையும்.

கரகம் தலையிலிருக்கும் போது இரண்டு ஏணிகளைத் தரையில் நிறுத்தி அவற்றில் கால்களை ஊன்றிச் சமன்படுத்திய வாறு மேலேறிக் கீழிறக்குவதும் உண்டு. கரகமின்றி நிறுத்தப் பட்டுள்ள ஏணியின் ஊடே நுழைந்து மேலும் கீழும் வருவதை யும் காணலாம். தரையில் ஒரு குடத்தைக் கவிழ்த்து வைத்து அதன் மேலேறிக் கரகமாடுவதும் களிப்புறு காட்சியாகும். இத் தகைய வித்தைக் காட்சிகள் மக்களை வியப்பிலாழ்த்தி மகிழச் செய்வதற்கும் தங்களுடைய தனித் திறமையைப் புலப்படுத்து வதற்கும் கலை மாதர்களால் செய்யப்படுவனவாகும்.

இரண்டு பெண்களோ அல்லது பலர் கூடியோ கரகம் ஆடும் காட்சிகளும் தற்காலத்தில் நடைபெறுகின்றன. ஆட்டத்தின் இடையில் வித்தைக் காட்சிகளைக் காட்டுவது கரக ஆட்டத்தின் கலைத் தன்மையைக் குன்றச் செய்வதாக உள்ளது. கலையுடன் மக்களுக்கு ஏற்படும் ஒன்றிய உணர்வு சிதறி விடுவதாகத் தோன்றுகிறது. அவற்றை நடுவில் காட்டாது இறுதியில் காட்டினால் கலையுணர்வும் கெடாது; திறமையும் மறையாது.

கரக ஆட்டத்தின் கூறுகள் சிலப்பதிகார காலத்தில் இருந்த தாகக் கூறலாம். மாதவி ஆடிய 11 ஆடல்களில் ஒன்று ‘குடக் கூத்து' என்று கூறப்பட்டுள்ளது. அது கண்ணன் ஆடிய கூத் தாகும். பாணாசுரன் கண்ணனின் பேரனான அநிருத்தனைச்

சிறை வைத்து விடுகிறான். அவனை விடுவிப்பதற்காக

மண்ணாலும் வெண்கலத்தாலும் செய்த குடங்களைத் தலையில் வைத்துச் சோ நகர வீதியில் கண்ணன் ஆடுகிறான். விநோதக் கூத்துக்களில் ஒன்றாகக் ‘குடம்’ குறிப்பிடப் பெற்றுள்ளது. நாட்டுப் புறத்துச் சாமியாடிகள் இன்றும் மண்குடங்களைத் தலையில் வைத்து ஆடுவதைப் பார்க்கலாம்.