i
79
கரகமெடுத்து ஆடுவோர் சில பாடல்களைப் பாடுவதைக் கேட்கலாம். பாடல்கள் நாட்டுப் புறப் பாடலிசை அமைப்பில் இருக்கும். ஒன்று முதல் பத்து வரை எண்கள் அமைந்த
பாடலொன்றைப் பார்க்கலாம். முத்துமாரி அம்மனை அழைத்தே பாடப்படுகிறது.
'ஒண்ணாம் கரகமாடி எங்க முத்துமாரி ஒசந்த கரகமாடி எங்க முத்துமாரி ரெண்டாம் கரகமாடி எங்க முத்துமாரி ரத்தின கரகமாடி எங்க முத்துமாரி
இவ்வாறு பத்துவரை எண்களைக் குறிப்பிட்டுப் பாடுவர். பாட்டின் மொழி பொருள், இசை எல்லாம் இனிமையாகவும் எளிமையாகவும் இருக்கும். ஆனால் சுவை மிகுதியாகக் காணப் படும். அது நாட்டுப்புற மக்களைக் கவரக் கூடியது.
இன்று தெய்வ வழிபாடாகவும் கலை வெழிப்பாடாகவும் கரக ஆட்டம் நடக்கிறது. இதன் தொடக்கம் எவ்வாறு இருந் திருக்கும் என்பதைச் சிந்திக்கலாம். முற்காலத்தில் குடி தண்ணீர் எடுக்க வேண்டுமானால் பெண்கள் தூர இடத்து ஆற்றுக்கோ அல்லது குளத்துக்கோ சென்றிருக்க வேண்டும் நீர் நிறைந்த குடங்களைத் தலையில் வைத்து நடத்திருப்பர் பழக்கத்தின் காரணமாகக் கையைக் கொண்டு குடத்தை பிடிக் காமல் நடந்திருப்பர். அந்த நடையில் ஓர் அழகு மின்ன
லிட்டிருக்கும். அதைக் கலையாக மனிதன் கண்டு களித்திருக் கலாம். அதை விளக்கம் பெறச் செய்து கரக ஆட்டக்கலை சீர்பட்டு வளர்ந்து இருக்கலாம். மனிதனின் இயல்பான தேவை அவனைச் செயல் பட வைத்து அதன் மூலம் மகிழ்ந்த கலைத் தன்மை சீர்பட்டுக் கலைகளில் சில தோன்றியிருக்கலாம். அத்தகைய கலைகளில் ஒன்றாகக் கரக ஆட்டத்தைக் கருதலாம். நீருடன் மாரியை அடையாளம் கண்ட மனிதன் அதனை இறையருளுடன் கலந்து அந்தக் கலைக்கு வழிபாட்டுத் தன்மை யைத் தடவி அதனைச் சமயவுணர்வுக் கலையாகக் கருதியிருக் கலாம். இயல்பான மனிதச் செயலில் தோன்றி இறையுணர்வில் கலையாகக் வளர்ந்து கரக ஆட்டம் வாழ்கிறது. சமயக் கட்டுக்குள் தன்திறமையை அடக்க இயலாத கலைஞன் அதனை வேறு முறையில் வளர்த்திருக்க வேண்டும். இன்று இறை வழிபாடாகவும் சமயவுணர்வுக்கலையாகவும் கரக ஆட்டம் வளர்ந்துள்ளது.