பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

கோலட்டம்

கோலாட்டம் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் மிகவும் கோலாகலமாக ஆடப் பெற்று வரும் ஆட்டமாகும். இதில் இரண்டு கோல்கள் அல்லது கொம்புகளைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்றை மோதி ஒலி எழுப்புவர். அடிக்கப்படும் கோல்களின் சிறப்பு பற்றியே இந்த ஆடலுக்கு இப்பெயர் கொடுக்கப் பெற்றுள்ளது. ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடுவர். கால்களில் சதங்கையும் கட்டி இருப்பர்.

கோல்கள்

இருவண்ணமுடையவையாக இருக்கும். பொதுவாகச் சிவப்பும் பச்சையும் பூசி இருப்பார்கள். பெண்களே இதனைச் சிறப்பாக ஆடுவர் என்று கருதப்படுகிறது. இறைவனை வாழ்த்தி வணங்கும் பாடல்களைப் பாடுவ தற்காகவே இவ்வாடல் முதன்முதலில் பயன் பட்டது. தீபாவளி யைத் தொடர்ந்து வரும் அமவாசை நாளன்று கோலாட்டம் தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் நடை பெறும். வீட்டுக்கு வீடு பல பெண்கள் சென்று கோலாட்டம் ஆடுவர். ஆட்டம் வீட்டு முற்றத்தில் நடைபெற்றுப் பலருடைய பார்வைக்கு வசதியாக அமையும்.

பெண்கள் வட்டமாகச் சுற்றி நின்று கோலடித்து ஆடுவர். ஆட்டம் தொடங்கிய பின்பும் பெண்கள் வந்தவாறு இருப்பர். அவர்கள் வரவர வட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கும். பாடல்களையும் பாடி ஆடல்களையும் ஆடுவர். கோல்களை அடிப்பதும் முன்னும் பின்னும் திரும்பி மாறி மாறி அடிப்பதுமாக ஆட்டம் நடைபெறும். சில சமயம் குனிந்தும் நிமிர்ந்தும் ஆடுவர். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் கோல்களை அடிப்பதைப் பார்க்கலம். தன் கையில் இருக்கும் கோல்கள் அடிப்பதுடன் முன்பின்னுள்ளவர்களின் கோல்களையும் தட்டி ஒலி எழுப்புவர். வட்டத்தில் அனைவரும் சுற்றிச் சுற்றி வந்தவாறு ஆட்டம் நடைபெறும். அனைவரும் ஒரு ஒழுங்கைப் பின்பற்றிப் பாடலின் தாளத்துக்குத் தக்கவாறு கோல்களைத் தட்டி ஒலி எழுப்பதே இந்த ஆட்டத்தின் சிறப்புக் கூறாகத் தோன்றுகிறது.

கண்ணனின் சிறப்புகள் பற்றியே பெரும்பாலான கோலாட்டப் பாடல்களும் இருக்கும். பின்பு பல கடவுள்கள் பற்றிய பாடல்களும் இடம்பெற்றன. இப்பொழுது சமூகத்தைப் பற்றிய பாடல்களும் பாடப்படுகின்றன. கோலாட்டத்துக்கு