81
ஒரு புராணக் கதைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படு கிறது. தேவர் உலகில் பந்தாசுரனை எதிர்த்து ஒரு கடும்போர் நடக்கிறது. போரைத் தேவர்களுக்கு வாய்ப்பாகத் திருப்ப பார்வதி தேவி ஒன்பது நாட்கள் கடும் தவம் செய்கிறாள். தவத்தின் கடுமையால் தேவியின் முகம் பொலிவிழந்து கருமை யாகி விடுகிறது. சிவபெருமானாலும் அதனைப் பார்க்க முடிய வில்லை. அவ்வளவு கோரமாக முகம் மாறிவிடுகிறது. பார்வதி யின் தோழியருக்கு அதைத் தாங்க முடியவில்லை. அவர்கள் வேகமாக ஓடி நந்தி தேவருக்கு முன்பாகச் சென்று அவருடைய அருளை வேண்டிக் கோலாட்டம் ஆடுகின்றனர் ஆட்டம் இங்கு நடந்து கொண்டிருக்கும் போதே பார்வதியின் முகம் படிப்படி யாகப் பொலிவு பெற்று விடுகிறது. அவள் அருள்வடியும் அழகுடன் தோன்றுகிறாள். கோலாட்டத்தின் சிறப்பு. இக் கதையின் மூலம் விளக்கப் படுகிறது. கதை. கற்பனையாயினும் கருத்து கோலாட்டத்தின் உயர்வைப் புலப்படுத்த உதவுகிறது.
தான்
பல
இடங்களில் இன்றும் அம்மன் சாத்திரையின் (விழா) போது நடைபெறும் கோலாட்டம் பஸவன் (நந்தி) சன்னதியில் தொடங்கப்படும். இவ்வாறு ஆடும் போது நந்தி தேவருக்குக் களிமண்ணாலான ஓர் உருவம் செய்து வைப்பர். அதற்கு முளைப்பாலிகை கொண்டு வருவர். ஒரு சிறுவனை நந்தி தேவனாகக் கருதி அவனுக்குப் பலவகையில் செய்யப்படும். விழா முடிவுற்றதும் களிமண் நந்தியையும் முளைப்பாலிகையையும் ஆற்றிலோ குளத்திலோ விட்டுவிடுவர்.
காஞ்சி
'செவ்வாய்ச்சியர் புராணத்தில்
படையல்
கோலாட்டம்'
என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து அக்காலத்திலேயே இத்தகைய ஆடல் நடைபெற்றதாகவும் அதில் கலந்து கொண்டதாகவும் அறியலாம். ஆனால் இக்காலத்தில்
ஆண்களும்
களுடன்
கோலாட்டம்
ஆடுவதைப்
பார்க்க
பெண்களே
முடிகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் சிறுசிறு மாறுதல் நடப்பதைக் காணலாம். வடமொழியில் இந்த ஆடலை "தண்டலாஸ்யா' என்று கூறுவர். 'தண்டம்' என்றால் 'கோல்' என்றும் 'லாஸ்யா' என்றால் 'ஆடல்' என்றும் பொருள் கொள்ளலாம். இராஜஸ்தானில் ‘சுண்டியராஸ்' என்ற பெயரில் ஆட்டம் இன்றும் நடைபெறுகிறது. பயன் படுத்தப் பெறும் கோல்கள் இருக்கும். தமிழ் நாட்டில் கோல்கள் சிறியதாகவும் குட்டை யாகவும் இருக்கும்.
ஒருவகை
ஆட்டத்தில்
இந்த பருமனாக
BIT-6.