பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்.

"பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல்தார் களைந்து
தண்டொடு பிடித்த, தாழ்க மண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன் மகனே!
எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே?"29

இப்பாடலில் உலாவரும் அப்பார்ப்பனப்பாங்கனைத் திருவாளர் பி.டி.எஸ். அவர்கள் பார்த்துள்ளார்.தம்முடைய நூலில், அவனைப் படம் பிடித்தும் காட்டியுள்ளார். ஆனால்,அப்பாட்டின் கருப்பொருள்,இடித்துரைத்த பார்ப்பனப்பாங்கனின் அறிவுரை யினை ஏற்க மறுத்து மாறாகத், தன் காதல் கைகூடத் துணை நிற்குமாறு தலைவன் வேண்டுவதே ஆகவும், திரு.அய்யங்கார் அவர்கள், அதை அக்கருத்தோடு நோக்காது 'அது மணமாகாத பல்கலைவல்ல, ஒரு பார்ப்பன் இனைஞனைப் படம் பிடித்துக் காட்டுகிறதேயல்லாது, காதலுக்குத் துணைபோகும் பாங்கள் பணி குறித்து எதுவும் காட்டவில்லை எனக் கூறித் தட்டிக் கழித்துவிட்டுள்ளார்.இது,அவர் கருத்துக் குற்றமே அல்லது வேறு அன்று.30

"தொல்காப்பியர் கி.பி. முதல் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்திருக்க இயலாது என்பதற்கான சான்றுகளை, மேலே கூறியவாறெல்லாம் காட்ட முயன்றிருக்கும். திருவாளர். பி.டி. சீனிவாச அய்யங்கார், தொல்காப்பியர்,கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவராவர் எனக் கூறப்படும் ஒரு கருத்து நிலவுவதை அறிந்திருந்தும், அதை மறுத்து ஒரு சொல்லும் கூறினாரல்லர்.

பெரும்பாலான ஐரோப்பிய திறனாய்வாளர்கள் பாணினி,கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்