பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தமிழக வரலாறு- கரிகாற் பெருவளத்தான்

காப்பியத்தை இயற்றியவர்' எனக் கூறுகிறது. "ஐந்திரம் நிறைந்த தொயன்" என்பது பாயிரம். சமஸ்கிருத இலக்கணத்திற்கு. முதல் நூலாகக் கருதப்படுவதும், ஊழிக்கால் அளவை உறுதி செய்யத் துணைபுரிவதுமாகிய பாணினியின் இலக்கண நூல் இருக்கும்போது,தொல்காப்பியர் அதைப் பயின்று,தாம் இயற்றிய தமிழ் இலக்கணத் திற்கு,அதை முதல் நூலாகக் கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்குத், தொல்காப்பியர் காலந்துத் தென்னாட்டு இந்துக்களுக்குப் பாணினி, அறிமுகம் ஆகாதிருந்திருக்க வேண்டுமென்பது உண்மையானாலல்லது, விடை காண்பது இயலாது தம்முடைய இலக்கண நூலில், பாணினி, குறிப்பிடும் முன்னோர்கள் அறுபத்து நால்வரில் இந்திரனும் ஒருவர். ஆகவே, அவ்வித்திரன், பாணினிக்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்தவராதல் வேண்டும். அவ்வகையால், தம்முடைய தொல்காப்பியத்திற்கு, முதல் நூலாகப் பாணினியத்தைக் கொள்ளாது, அப்பாணினிக்கு முற்பட்ட வராய் இந்திரன் இயற்றிய ஐந்திரத்தைக் கொள்ளும் தொல்காப்பியர், பாணினிக்கு உரிய 'காலமாகச், சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களால் வகுக்கப்பட்ட கி.மு.350க்கு முன்னர் வாழ்ந்த வராதல் வேண்டும்"35 என்று கூறுகிறார் திருவாளர் எம்.சீனிவாச அய்யங்கார். இது ஒரு காரணம்.

"லௗஃகான் முன்னர் யலவும் தோன்றும்"-1:24.

(தொல்-எழுத்து.24)

"ஞநமவ என்னும் புள்ளி முன்னர் பஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே"-1;27

(தொல் - எழுத்து 27)

"மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும்"-1;28

(தொல்-எழுத்து:28)