பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

புலவர் கா.கோவிந்தனார்

என்ற சூத்திரங்களிலிருந்து, தொல்காப்பியர். காலத்தில் 'ல்ய, ளய், ஞய : ந்ய, ம்ய, ல்ய. ம்வ' என்பன போலும் மெய்ம் மயக்கங்களை இடையில் கொண்ட சொற்கள் வழக் கத்தில் இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது, அச்சூத்திரங்களுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், "இங்ஙனம் ஆசிரியர் சூத்திரம் செய்தலின் அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம், அவை இக்காலத்து இறந்தன' எனக் கூறியுள்ளார். இவை போலும் சொல் எதுவும், இன்றைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெறவில்லை.

கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததான திருக்குறளிலும்,அவை இடம் பெற்றில. ஆகவே,அத்தகைய சொல்லாட்சி, திருக்குறள் காலத்துக்குக் குறைந்தது,300 ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்திருக்க வேண்டும். இக்காரணங்களால், தொல்காப்பியர், கி.மு. 350க்கு முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.இது அவர் காட்டும் இரண்டாவது.காரணம்.

திருவாளர்.எம்.சீனிவாச அய்யங்காரவர்களின் இந்நூலைத் திருவாளர். பி.டி. சீனிவாச அய்யங்காரவர்கள் பார்த்துப் படித்துள்ளார்.அதிலிருந்து சில பகுதிகளைத் தம்முடைய நூலில் மேற்கோளாகவும் காட்டியுள்ளார். திருவாளர்,எம்.சீனிவாச அய்யங்சார், அவருடைய தமிழ் ஆராய்ச்சி (Tamil Studies) என்றநூலின் 287ஆம் பக்கத்தில் மணக்கிள்ளி குறித்துக்கூறியிருப்பதை ஏற்றுத் தம்முடைய தமிழர் வரலாறு (History of The Tamils) என்ற நூலின் 512ஆம் பக்கத்தில், "மணக்கிள்ளியை, நெடுஞ்சேரலாதனின் உடன் பிறந்தாள் கணவனாகக் கொண்டு,அவிழ்க்க இயவர் முடியைத்; தைரியமாக அளிழ்க்க முயன்றுள்ளார், திரு.எம்.சீனிவாச அய்யங்கார்"38 எனக் கூறியிருப்பது காண்க.


த-7