பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

கூறப்பட்டிருக்கும் மற்றொரு அகச்சான்று; புறம் : 373 அது, குராப்பள்ளித் துஞ்சியான் கருவூரை வெற்றி கொண்டதைப்பாராட்டிக் கோவூர் கிழார் பாடியது.அதில்,கருவூர், கொளுவில்தான் இடம் பெற்றுளது. மூலத்தில் குராப்பள்ளியான் கொங்கு நாட்டை வென்றதையும்;15 வஞ்சியை வென்றதையும்16 கூறியுள்ளாரே அன்றி,அவன்,கருவூரை, வென்றதைக் கூறவில்லை. அப்பாடலில் வந்திருக்கும், பொருள்

"பிட்டை ஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்கு பெருந்தானை"17

என்ற தொடரில், இடம் பெற்றிருக்கும் தெளிவில்லா “பிட்டை" என்ற சொல் ஒன்றைக் கொண்டே அவ்வளவு கற்பனைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

கோவூர் கிழாரை அறிந்தவர்கள்,அவர் போர் தொடுத்து நிற்கும் அரசர்கள் பால் மாறி மாறிச் சென்று,பகை மறந்து, போரைக் கைவிடுங்கள் என அறிவுரை வழங்கும், 'போர் ஒழிக்கும்'புலவரே அல்லது, போரை ஊக்குவிக்கும் புலவர் அல்லர் என்பதையும்; தம் பாட்டுடைத் தலைவர்கள் பெயரைத் தெளிவாக உணர்த்த வல்லவரே அல்லது, தெளிவிலாச் சொல் ஒன்றால் குறிப்பிடுபவர் அல்லர் என்பதையும், கொடையாளி களைப் பாராட்டும் பேருள்ளமும், அக்கொடையாளிகள் இறந்து விட்டால், கண்ணீர் விட்டுக் கலங்கும் இரக்க உள்ளமும் உடையவரே அல்லது,பிட்டனைப் போன்ற கொடையாளியின் தோல்விக்குப் பாராட்டு வழங்க வல்ல பண்பு கெட்டவர் அல்லர் என்பதையும் அறிவர்.ஆகவே அவர் பாட்டில் வந்திருக்கும் அவ்வொரு சொல் கொண்டு, கூறப்பட்டவை அனைத்தும் கற்பனை அல்லது வரலாற்றோடுபட்ட உண்மை அன்று என்பதை உணர்க.

மேலும், வஞ்சிப் போரில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனோடு போரிட்டவன், திருவாளர், மயிலை.