பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழக வரலாறு- கரிகாற் பெருவளத்தான்

23."செவி உணவின் கேள்வி உடையார்"31

24.ஈண்டிய கேள்வியர்.32

25."நுணங்கிய கேள்வியர்"33

மேலே காட்டிய மேற்கோள்கள் இருபத்து ஐந்திலும்,

2."வேய்வை போகிய விரல்உளர் நரம்பின் கேள்வி போகியநீள் விசித் தொடையன்34

3."அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி

நரம்பின்

பாடுதுறை முற்றிய பயன்.தெரி கேள்வி35

4."புரி அடங்கு நரம்பின் தொடையமை கேள்வி இடவயின் தழீஇ"36

19."நீடிக்கிடந்த கேள்விக் கிடக்கையின் இணை நரம்பு"37

20.ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் ஒரேழ் மாலை38

ஆகிய ஐந்து இடங்களில் மட்டுமே கேள்வி எனும் சொல், இசை எனும் பொருள் தருகிறது. அந்த ஐந்து இடங்களிலும், அச் சொல், இசைத் கருவிகளோடு தொடர்பு படுத்திக் கூறப்பட்டிருப்பது தெளிவு. ஏனைய இடங்களில் எல்லாம், அது, மந்திரம் அல்லது அறிவு என்ற பொருளையே தருகிறது என்பது தெளிவு.

அவ்வாறாகவும்,அச்சொல், தனித்துக் கிடந்தே ஏனைய பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு,"இசை" எனும் பொருள் ஒன்றையே குறிப்பதாகக் கொண்டு,'ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்' என்ற தொடரில் வரும், அறிவு எனும் பொருளே தருவ தாகிய "கேள்வி" எனும் சொல், 'இசை" எனும் பொருள் உடையதாகக் கூறி, மதுரை மாநகரில் இசைத் தமிழ் வளர்க்கும் சங்கமும் இருந்தது எனத், "தமிழ்நாட்டு