பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழக வரலாறு கரிகாற் பெருவளத்தான்

பகை வென்ற பின்னர், காடாகக் கிடந்த இடங்களை எல்லாம், நாடாக ஆக்கி, நீர்வளம் தரும் குளங்கள் பல வற்றைத் தோண்டி, நாட்டின் வளத்தையும் பெருக்கினான். மாட மாளிகைகள் நிறைந்த உறந்தைத் தலைநகரில், கோயில் களோடு, குடிகளையும் வாழச் செய்தான். திருமால் நிலைத்து வாழும் உறந்தைக் கோட்டையின் மதில்களிடத் தில் பெரிய வாயில்களையும், சிறிய வாயில்களையும், மதில் தவையில் அம்புக் கட்டுக்களையும் அமைத்து வைத்தான்.8 இவையெல்லாம் செய்தவன் யார் என்றால், சிங்க ஏறு. போன்றவனும், பகையரசர்களுக்குத் துன்பம் தருபவனும் ஆகிய திருமாவளவன் என்பான்.9

"கூzறாகிர்க்
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர் பிண்யகத் திருந்து பீடுகாழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று. பெருங்கை யானை பிடி புக்காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண் காப்பு ஏறி வாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யாள்,{{sup|10செற்றோர்.
............., ஒங்கு எழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழ


உழிஞை சூடி---11

முனைகெடச் சென்று முன் சமம் முருக்கிய12


பெரும் பாழ் செய்தும் அமையான்:13


தான்.முன்னிய துறை போகலின்
பல் ஒளியர் பணிபு ஒடுங்கத்
தொல் அருவாளர் தொழில் கேட்ப