பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழக வரலாறு.கரிகாற் பெருவளத்தான்

பால்கெழு சிறப்பின் பல் இயம் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்;
நான்மறை அந்தணர் நவின்ற ஒதையும்:
மாதவர் ஒதி மலிந்த ஒதையும்;
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்!
போரிற்கொண்ட பொருகரி முழக்கமும்;
வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்,
பணைநிலைப் புரவி ஆலும் ஒதையும்
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்:
கார்க் கடல் ஒலியின், கலிகெழு கூடல்
ஆர்ப்புஒலி எதிர் கொள"

3. மேலது 13:189-196

"மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும் பொழில் தென்கரை எய்தி,
"வானவர் உறையும் மதுரை வலம் கொளத்
தானளி பெரிதும் தகவுடைத்து என்றாங்கு.
அருமிளை உடுத்த அகழி சூழ் போகி,

போர் உழந்தெடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
வாரல்’ என்பன பேர்ல் மறித்துக் கைகாட்ட

அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதுTர்: புக்கனர்"

4. மேலது. 13:191:195

"புள்ளணிகழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப்பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை,
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர்"