பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

. தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

தொடரில் வரும் "வேந்தன்” என்பதற்கும் அடியார்க்கு நல்லார், 'கரிகாலன்' என்றே பொருள் கொண்டுள்ளார்.

வஞ்சின மாலையில், கண்ணகி, புகார் நகரத்தில் தினக்குமுன் வாழ்ந்திருந்த கற்புடை மகளிர் எழுவர்களை வரிசையாகக் கூறுங்கால். ஆதி மந்தியைப் பெயர் சுட்டிக் கூறாமல், மன்னன் கரிகால் வளவன் மகள்' எனக் கூறியுள்ளார் இளங்கோவடிகளார்.

கரிகாலன் பற்றி பரணர் கூறுவது :

விரிந்த தலையாட்டம் எனும் அணியால் சிறந்த, விரைந்து ஒடவல்ல, நல்ல குதிரைப் படையுடன் கூடிய, பகைவர்க்கு அச்சம் தரவல்ல சேனையுடன், தனக்கு ஏற்புடைய, களத்தில் தங்கி இருந்த பெரிய வளத்தை உடைய கரிகால் வளவன் முன் செல்லமாட்டாது, வாகைப் பறந்தலை எனும் இடத்தே நடந்த போர்க்களத்திற் கண், அவன் வெற்றி பெற்று விடவே, தம் ஒன்பது குடைகளையும் நல்ல பகல் போதிலேயே போட்டுவிட்டு ஓடிய, பெருமை இழந்த மன்னர்.

விரி உளைப் பொலிந்த உடை நன்மான் வெருவரு தான்னயொடு வேண்டு புலத்து இறுத்த பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
"சூடா வாலிகப் பறந்தலை: ஆடு பெற
ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த
பீடு இல் மன்னர்"25

கடுஞ்சினமும்,பேராற்றலும்,பெரும் புகழும் வாய்ந்த கரிகால் வளவன், ஆரவாரமும், கள் வளமும் வாய்ந்த வெண்ணிவாயில் என்னும் இடத்தில், சிறப்பு வாய்ந்த பகை அரகர் பகைத்து வந்த போரில், பேரொலி எழுப்பும் வீர முரசு போர்க்களத்தே ஒழிந்துகிடக்க, வேளிர் பதினொரு