பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்.

டுடைத் தலைவன் யாவனே ஆயினும், அவனை முன்னிலைப் படுத்தியே பரணர் பாடியுள்ளார், மூலத்தில் பெயர் இல்லை. ஆனால், அவன் பொற்றேர்மீது பொலிவுற . வீற்றிருப்பவன் எனக் கூறப்பட்டுளது.

"பொலத்தேர் மிசைப் பெர்லிவு தோன்றி
மாக்கடல் நிவந் தெழுதரும்
செஞ்ஞாயிற்றுக் கவினை"29

என்ற வரிகளைக் காண்க.

கரிகாலன் புற்றி கருங்குழல் ஆதனார் :

வளவ! என அழைத்து, அவன் ஆற்றல், அவன் நாட்டு வளங்களைப் பாடியுள்ளார்.30 கொளு மட்டும், கரிகால் பெருவளத்தானைப் பாடியது என்கிறது.

அவருடைய . மற்றொரு . புறநானுற்றுப் பாடல்31 மூலத்தில் பெயர் பற்றி சிறு குறிப்பும் இல்லை. கொளுதான் கூறுகிறது. அவன் செய்த யாகம் குறிப்பிடப்பட்டுளது. வெறும் கையறு நிலை.

கரிகாலன் பற்றிகழாத்தலையார்

சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகாற் பெரு வளத்தானோடு பொருது புறப்புண் ந்ாணி வடக்கு இருந் ததைக் கூறுவதாகக் கொளு கூறுகிறது. மூலத்தில் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை.

"உலவுத் தலை வந்த பெருநாளமயத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
புண்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன்"32

கரிகாலன் பற்றி வெண்ணிக் குயத்தியார்