பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

7.கண்ணகி சிலைக்கான கல்லை இம்யத்தே எடுத்து, கங்கையில் நீராட்டிக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன். ஆனால், அப்பெருஞ் செயல், அவன் பெயரோடு இணைத்து வழங்கப்படவில்லை. ஆகவே, இமயத்தில் வில் பொறித்த நெடுஞ்சேரலாதன் செயலை, அவன் பெயரோடு இணைத்து அவன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என அழைக்கப்பட்டதுபோல், திருமாவளவன் இமயத்தில் புலி பொறித்தான் என்பது உண்மை நிகழ்ச்சியாயின், அச்செயல், அவன் பெயரோடு இன்னத்து வழங்கப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை. ஆகவே, திருமா வளவன் இமயத்தே புலி பொறித்தான் அல்லன் என்பது பொருந்தாது.

8.கலிங்கத்துப்பரணி ஆசிரியரும், கரிகாலனின் வரலாறு அனைத்தையும் பாடிவிடவில்லை. அவன் வாழ்க்கையில் நிகழந்தன அனைத்தையம் கூறி விடவில்லை. அவன் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த நிகழ்ச்சி, பகைவர் சிறையினின்றும் வெளியேறிப் பகை வென்று அவன் தன் அரசுரிமையைப் பெற்றது, ஆகும். அதையே கலிங்கத்துப் பரணி ஆசிரியர் கூறவில்லை. அவர் அதைக் கூறவில்லை; ஆகவே அது நிகழவில்லை என வாதிடல் பொருந்தாது.

இந்த வாதம் எவ்வாறு பொருந்தாதோ,அவ்வாறே,குறுமி வெற்றியைப் புலவர்கள் பாடவில்லை. ஆகவே குறுமி வென்ற சோழன் கரிகாலன் ஆக மாட்டான். ஆகவே பட்டினப் பாலையின்பாட்டுடைத் தலைவனும் கரிகாலன் ஆகான். ஆகவே, அவன் திருமாவளவனும் அல்லன், என்ற வாதமும், பொருந்தாது. ஒருவர் ஒன்றைப் பாடவில்லை. ஆகவே, அது நடைபெறவில்லை என்ற வாதம் பொருந்தாது! என்பதைப் பேராசிரியர், டாக்டர் சி. ஈ. இராமச்