பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

29

சந்திரன் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதை முன்ன்ரே விளக்கியுள்ளேன்.

9.இளங்கோ அடிகளார், கடலாடு காதை, வஞ்சின மாலை ஆகிய இரு இடங்களில், கரிகாலன் எனப் பெயர் சுட்டிக் கூறியுள்ளார், எனவும், இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் மட்டும் திருமாவளவன் என்ற பெயரை ஆண்டுள்ளார் எனவும், பேராசிரியர், ஆ டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். இதில் ஒரு திருத்தம். இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் திருமாவளவன் என்ற பெயர் இட்ம் பெற்றிருப்பது உண்மை. ஆனால், கடலாடு காதை, வஞ்சின மாலைகளில் ஆண்டிருப்பது வெறும் 'கரிகாலன்' என்ற பெயர் அன்று; மாற்றாகக் கரிகால் வளவன் என்ற பெயராகும்.

கடலாடு காதை, வஞ்சினமாலை ஆகிய இடங்களிலும் வரும் கரிகால்வளவன், சிலப்பதிகாரத்துக்கும், அதாவது, கண்ணகி வாழ்ந்த காலத்துக்கும் முந்திய காலத்துக் கரிகால்வளவனே ஆவன் என்பது, அக்கரிகால்வளவர் இருவரும், புதுப்புனல் விழாக் கொண்டாடிய கரிகால்வளவர் எண்வும், கரிகால்வளவன் மகளின் கணவனாம், ஆட்டனத்தியைக் காவிரி ஈர்த்துச் சென்ற காலத்துப்புனல் விழாக் கண்டிருந்த கரிகால்வளவனாம் எனவும் கூறப்பட்டுள்ளனர் என்பதால் புலனாகிறது..

அப்புனல் நிகழ்ச்சி, கண்ணகி காலத்துக்கு முந்தையது என்பது, அவ்வாதி மந்தியைப் போல்வார் எழுவர் வாழ்ந்திருந்த புகார் எனக் கடந்த கால நிகழ்ச்சிகளாகக் கண்ணகி கூறியிருப்பதால் உறுதிப்படும். ஆகவே, அவ்விரு இடங் களிலும் சுட்டிப் கூறப்பட்டிருக்கும் 'கரிகால்வளவன். கண்ணகி காலத்தவனோ, அவளுக்குச் சிலை எடுத்த செங் குட்டுவன் காலத்தவனோ அல்லன்; மாறாக, அவர்கள்