பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

31

ஆக, "கரிகாற் பெருவளத்தான்" என ஆண்டிருக்கும் அவ்விரு நிகழ்ச்சிகளும், கண்ணகி காலத்துக்கும் முற்பட்ட நிகழ்ச்சிகளே ஆதலாலும், "திருமாவளவன் என ஆண்டிருக்கும் நிகழ்க்சியும் அதேபோல், கண்ணகி காலத்துக்கும் முற்பட்ட நிகழ்ச்சியே ஆதலாலும், சோழ வேந்தன் குறிப்பிடப்படும் இடங்களிலெல்லாம், "கரிகாலன்" என்றே பொருள் கூறியுள்ள அடியார்க்கு நல்லாரும், 'கரிகாற் பெரு வளத்தான்' என வரும் அவ்விரு இடங்களில், கரிகாலன் எனப் பொருள் கூறாமல், கரிகாலன் என்ற பெயரை அடுத்துத் திருமாவளவன் என்பதில் இடம் பெற்றிருக்கும். வளவன் என்பதையும் இணைத்து, மூலத்தில் உள்ளவாறே கரிகாற் பெருவளத்தான்' என்றே பொருள் கொண்டுள்ளார் ஆதலாலும், மனையறம் படுத்த காதை, உரைசால் சிறப்பின்' எனத் தொடங்குவதற்கு முன்னர், இடம் பெற்றிருப்பதாக மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவர்களின். சிலப்பதிகார மூலப் பிரதியில்84, "திருவின் செல்வியொடு" எனத் தொடங்கி, "இசையொடு சிறந்த" என முடியும் 13வரிகளில், "கரிகாற் பெரும் பெயர்த் திரு மாவளவன்" எனக், கரிகாற்பெருவளத்தானும், திருமாவளவனும் ஒருவரே என்பதை உறுதி செய்யும் சொற்றொடர் இடம் பெற்றுளது, ஆதலாலும், இளங்கோ அடிகளார். கரிகாற்பெருவனத்தான் என்ற பெயராலும், திருமாவளவன் என்ற பெயராலும் ஒருவனையே குறிப்பிட்டுள்ளார் என்பது உறுதியாம்.

கரிகாலனும், திருமாவளவனும் ஒருவன் அல்லர். வேறு வேறுபட்டவர் என்ற தம் கொள்கையை வலியுறுத்த பேராசிரியர், டாக்டர். சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள் 'மற்றொரு வாதத்தையும் வைத்துள்ளார்.85

பட்டினப் பாலையில் வரும் 'திருமாவளவன்'86 என்ற பெயரை. உரையாசிரியர் நச்சினார்க்கினியர், திரு.மா-வள வன்' எனப் பிரித்து, 'திருவின் பெருமையையுடைய கரிகாற் பெருவளத்தான்' எனப் பொருள் கூறியுள்ளார்.87