பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

39

இங்கு, திருமாவளவன் பற்றி ஏதும் கூறவில்லை எனினும், பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன், 'திருமா வளவன்7 ஆதலின் கரிகாற் பெருவளத்தான், கரிகாலன். திருமாவளவன் ஆகிய பெயர்கள், சோழன் கரிகாலனையே குறிப்பவை என்பதையும் கூறாமல் கூறியுள்ளார் எனக் கொள்ளலாம்.

"தமிழ் நாட்டு வரலாறு:-சங்க காலம்-அரசியல்" என்ற நூலில், 'சோழர்' என்ற தலைப்புள்ள கட்டுரை எழுதியிருக்கும் ஆராய்ச்சிப் பேரறிஞர் திருவாளர். மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள், பக்கம் 287ல்,

'கரிகாலன்' என்னும் பெயருடைய சோழ அரசன் சங்க காலத்தில் ஒருவன்தான் இருந்தான். அவனுக்குப் பல்வேறு வகையில் வழங்கி வந்த பெயர்களும், அவனது பல்வேறு செயல்களும், பல்வேறு பாடல்களில், பல்வேறு புலவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் திரட்டி ஒப்பு நோக்கும் போது கரிகாலன் என்னும் அரசன் ஒருவன் தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது.

பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள பட்டினப் பாலை என்னும் பாட்டைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்; பொருங்ராற்றுப்படை என்னும் பாட்டைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். இவர்களது இந்தப் பாட்டுகள் கரிகாலன்மீது பாடப்பட்டவை. இவர் களால் பாடப்பட்டுள்ள கரிகாலன் ஒருவனே என்பதை அந்தப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அவனது பெயர்களை நோக்கி அறியலாம். திருமாவளவன், கரிகாலன், சோழன் கரிகாற் பெருவளத்தான், பெருவளக் கரிகால். எனக் கூறியுள்ளார்,8

தொடர்ந்து, கொளுக் குறிப்பு, பத்துப் பாட்டைத் தொகுத்தவரால் தரப்பட்டது. இவர், நம் எல்லோரையும்