பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழக வரலாறு-கர்காற் பெருவளத்தான்

உதியஞ் சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இருவரும் வெவ்வேறு அரசர்கள்

உதியஞ்சேரல் -சேரமான் பெருஞ்சோற்று- உதியஞ் சேரலாதன்

1.செங்குட்டுவனுக்குப் பாட்டன் - பாரதப் போர் நடந்தகாலத்தவன், கால் வழி

தெரியவில்லை

2.பேய்க்குப் பெருஞ் சோறு அளித்தான் -வீரர்களுக்குப் பெருஞ்சோறு

அளித்தான்.

3. பாடிய புலவர் கடைச் சங்க காலத்தவர் - பாடிய புலவர் தலைச்சங்க

காலத்தவர் (களவியல்உரை)

4. பகைவர்களை வென்றான் - பகைவர்க்கும், நண்பர்க்கும்

நடுநிலையாளனாய் விளங்கினான்.

என்று பட்டியலிட்டு,இருவரும் வெவ்வேறு அரசர்கள் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த பக்கத்தில், 'பெயர் ஒப்புமை, வள்ளன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இருவரையும் ஒருவர் என்று கூறுகின்றார். இந்த ஒப்புமை மேம்போக்கானது. ஆழ்ந்த நோக்கில் வேற்றுமைகளே மிகுதி. எனவே, இரு வேறு அரசர்கள் என்று கொள்வதே சரியானது-என அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

ஆனால், அக்கட்டுரையின் தொடக்கத்தில் உதியஞ் சேரவின் பண்பு நலம் கூறும் வகையில் இவன் (உதியஞ் சேரல்) குற்றமற்ற சொற்களையே பேசுவான். உண்மையே.