பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

55

பேசுவான். கொடை வழங்குதலை தன் கடமை என எண்ணிச் செய்தான்; கோணாத தன் நெஞ்சு விரும்பியவாறு செய்தான். நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் எனும் ஐம் பெரும் பூதங்களின் இயற்கை குணங்களாகிய பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளி போல் இவன் தனக்குப் பகைவர். பிழை செய்தபோது அப்பிழையைப் பொறுத்தலும். சூழ்ச்சியது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மன வலியும், அவ்வாற்றலால் அவரை அழித்தலும், அவர் வழிபட்டால், அவருக்குச் செய்யும் அருளும் உடையோனாவான்2

-என்று பாராட்டியுள்ள கட்டுரையாசிரியர், அதற்கு மேற்கோளாக, புறநானுாற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலின்,

"மண்டினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
திமுரணியநீரு மென்றாங்
கைம்பெரும் பூதத்தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும்
வலியுந்தெறலும் அறியுமுடையோய்”3

-என வரும் முதல் எட்டு வரிகளைக் காட்டியுள்ளார்.

அதே போல், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற தலைப்பின் கீழ் அவன் சிறப்பு நலன்களை,

நாட்டுப் பரப்பு :

வங்காளக் குடாக் கடலும், அரபிக்கடலும், இவனுடைய (சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதன்)