பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. புறநானூற்றுப் பாக்களுக்குப் பொருள் விளக்கம் அளிக்கும் கொளுக்கள் வரலாற்றுச் சான்றுகள் ஆகாது என்பது சரியான முடிவு தானா?

தமிழ் நாட்டு வரலாற்றுக் குழுவினரால் தொகுக்கப் பெற்று, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்காக, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1983ல் வெளியிட்ட 'தமிழ் காட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்' என்ல நூலில் "சேரர்" வரலாறு படைக்கும், ஆராய்ச்சிப் பேரறிஞர். மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள், 'இது போன்ற நிலைகள் இருப்பதால், கொளுக் குறிப்பினால் மட்டும் தெரிய வரும் செய்திகளை அப்படியே முழுமையான உண்மைகள் என்று நாம் எடுத்துக் கொள்ள இயலாது1 என்ற கருத்தை அறிவித்துள்ளார்.

அவ்வாறு அறிவித்த அவர் தம் கூற்றுக்கு ஆதாரமாக புறம் 389 ஆம் எண்ணுள்ள பாடவில். புலவர், தாம் பாடி வந்த அரசனிடம் (யார் என்று தெரியவில்லை) ஆதனுங்கன் போலப் பரிசில் தர்வேண்டும் என்று வேண்டு வதைக் காண்கிறோம். பாடலில், கொளுக் குறிப்பு. ஆதனுங்கனையே பாடியுள்ளதாகக் குறிப்பிட்டு விட்டது. இது பொருந்தாக் கூற்று”2 எனக் கூறி முடித்துள்ளார்.