பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

67

மாக புறம் 389 கொளுவைக் காட்டுவதோ, ஏற்புடைய தாகாது. - - -

திருவாளர். பி. தி. சீனிவாக அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு (History of the Tamils) என்ற நூலின் தமிழாக்கமான தமிழர் வரலாறு நூலின் இரண்டாம் பகுதியில் புறநானூற்றுக் கொளுக்கள் குறித்து என்னுடைய கருத்தை விளக்கமாக எடுத்துரைத்துள்ளேன்.13

"நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்ற தொகை நூல்களில் உள்ள அனைத்து அகத்துறைப் பாடல்களுக்கும், திணையும், துறையும், பாடிய புலவர் பெயரும் கொடுத்திருப்பது போல், புறநானூற்றுப் பாடல்கள் நானூறுக்கும் திணையும், துறையும், பாடிய புலவர் பெயரும் கொடுத்திருப்பதால், அது செய்தது, அப்பாடல் களைத் தொகுத்தவர் செயலாகும்.”

"புறனுாற்றுப் பாக்களில், முதல் 266 பாக்களுக்குத் திணை, துறை, பாடிய புலவர் ஆகிய விளக்கங்களுக்கு மேலாக, அப்பாக்கள் பாடப் பெற்ற சூழ்நிலை, அப்பர்க் களின் பாட்டுடைத் தலைவர்கள் ஆகிய விளக்கம் அளிக்கும் கொளுவும், அதை அடுத்துப் பொருள் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.”

"எந்தப் டாட்டோடு பொருள் விளக்கம் நின்று விடுகிறதோ, அந்தப் பாட்டோடு கொளுவும் நின்று விடுகிறது; ஆகவே, கொளு, பொருள் விளக்கம், ஆகிய இரண்டையும் செய்தவர் ஒருவரே; அவர்,அந்நூலைத் தொகுத்தவரினும் காலத்தால் பிற்பட்டவராதல் வேண்டும். நூலைத் தொகுத்தவர், கி.பி. ஆறாம் நூற்றாண்டினராயின், கொளுவும், விளக்கமும் அளித்தவர், கி.பி. 12 ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி. 16 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவராதல் வேண்டும்" என முடித்து