பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

69

கொளுக்கள் ஏற்கத்தக்கன அல்ல என்பதை உறுதி செய்ய திரு. அய்யங்கார் அவர்கள் எடுத்து விளக்கம் அளிக்கும் அந்நான்கு நிகழ்ச்சிகளுள், ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, ஒன்றை மட்டும் ஆய்ந்து, அவர் காட்டும் ஆதாரத்தின் பொருளின்மையை உறுதி செய்வோமாக.

திரு.அய்யங்கார் அவர்கள் காட்டும் சான்றுகளுள் முத லாவதான சான்று, புறம், 76, 77, பாக்களுக்குப் "பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யனை இடைக்குன்றுார் கிழார் பாடியது" என்ற் கொளுவாகும்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வென்ற தலையாலங்கானப் போர் குறித்து அறிய வேண்டிய செய்திகள்:

1.போர் நிகழ்ந்த இடம் ஆலங்கானம் என்பது;

2.போரில் வெற்றி பெற்றவன் பாண்டியர் குலத்தவன் என்பது:

3.அவன் செழியன் என அழைக்கப்பட்டான் என்பது;

4.போர் மேற்கொண்டபோது அவன் நனி இளையன் என்பது;

5.போர் மேற்கொண்டு சென்ற அவன், இனமாலை யாம் வேம்பும், பகைவர் அரணை முற்றுகையிடச் செல்வதை உணர்த்தும் உழிஞை - மாலையும் அணிந்து கொண்டான் என்பது;

6. அவன் பகைவர், சேரனும், சோமனும் ஆகிய வேந்தர் இருவரும், திதியன், எமினி. எருமைய.