பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|72||தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்.}

4."அரைசுபட அமர் உழக்கி
உரைசெல முரசவௌவி
முடித்தலை அடுப்பாகப்
புனல்குருதி உலைக்கொளீஇத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய"20

இவற்றுள், எடுத்துக்காட்டு ஒன்றில், செழியன் என்ற அவன் பெயரும், அவன் பகைவர் எழுவர் என்பதும், போர்க்களம் ஆலங்கானம் என்பதும் உணர்த்தப்பட்டன. எடுத்துக்காட்டு இரண்டில், களம், ஆலங்கானம் என்பது மட்டுமே உணர்த்தப்பட்டது. எடுத்துக்காட்டு மூன்றில் பகைவர், வேந்தர் என்பதும், அவன், செழியன் என்பதும் உணர்த்தப்பட்டன. எடுத்துக்காட்டு நான்கில், பகைவர் முரசு கைப்பற்றப்பட்டதும், அவன் களவேள்வி செய்ததும், அவன் செழியன் என்பதும் உணர்த்தப்பட்டன.

ஆக, அப்பாக்கள் நான்கினையும் ஒருங்கு வைத்து நோக்கிய வழியே, ஆலங்கானத்துப் போர் வீரன் செழியன்; அவன் பகைவர், வேந்தர் உள்ளிட்ட எழுவர்; களம், ஆலங் கரணம்; அவன், பகையரசர் முரசுகொண்டு, களவேள்வி செய்தான்; என்ற செய்திகளை அறிய முடிந்தது. அவன் இளையோன்; பகைவருள் வேந்தர் இருவர் ஒழிந்த ஐவர் யார்; அவன் களம் நோக்கிச் சென்ற கோலம் ஆகியவற்றை இவைதாமும் அறிவிக்க வில்லை.

பகைவர் எழுவருள், வேந்தர் இருவர் ஒழிந்த ஐவர், வேளிர் என்பதை உணர, மாங்குடி மருதனாரையும், அந்த ஐவர் இன்னின்னார் என்பதை உணர,

"செழியன்
ஆலங்கானத்து, அகன் தலை. சிவப்பச்
சேரல், செம்பியன், சினங் கெழுதிதியன்,
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி,