பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

வன் யார் கொலோ?-ஓரி கொல்லோ? அல்லன் கொலோ?” என வியந்து வினா எழுப்பி வாய் பிளந்து நிற்பதும், பெயர் அறியாப் படைமறவன் ஒருவனின் பேராண்மை கண்டு வியக்கும் பெயர் அறியாப் புலவர் ஒருவர், 'யார் கொலோ? அளியன்!” எனப் பிறிதொரு புறப்பாட்டில்32 வியப்பு அடிப்படையாக எழும் வினா எழுப்பி நிற்பதும் காண்க .

இம் மரபையொட்டி, புலவர் இடைக்குன்றுார் கிழார், புறம்:77ல், "யார் கொல்” என வினா எழுப்பியுள்ளார். இம் மரபு உணராத காரணத்தால், புறம்:76ல் அவன் ஒருவன், அவன் பகைவர் எழுவர் என்பதையும், அவன் ஆற்றலும் பெருமையும் அறியாது வந்துவிட்ட அப்பகைவர் களின் அறியாமையினையும், அவன், வேப்பந்தாரோடு உழிஞை மாலையும் அணிந்து சென்று, அப்பகைவர் எழு வரையும், ஒரு தானாகி நின்று வென்றதையும் விளங்கக் கூறியிருப்பதையும், புறம் 77ல் போர்க்களம் நோக்கிப் போகும் அப்போதும், அவன் இளமை மாறா நிலையினைக் கண்ணுற்று "யார் கொல்” என வினா எழுப்பி நிற்பதையும் கண்டு, “புலவருக்குத் தெரிந்தவனான, 76ஆம் புறப் பாட்டுத் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனும், புலவருக்குத் தெரியாதவனான 77ஆம் புறப் பாட்டு நனி இளையோனும், வேறு வேறுபட்ட இருவர் அல்லர், இருவரும் ஒருவனே என்பது நம்பக் கூடாத ஒன்று' எனக் கூறி எள்ளி நகையாடியுள்ளார், திருவாளர். அய்யங்கார் அவர்கள்.33

தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனின் புகழ்பாடும் புலவர் எண்மரும், அவனும், அப்போர் குறித்துப் பாடியிருக்கும் நற்றிணை, நெடுந்தொண்க, புறநானூறு ஆகியவற்றில் கலந்து கிடக்கும், பதினாறுக்கும் மேற்பட்ட அப்பாக்களை அரிதின் முயன்று தேடிப் பிடித்து, நுணுகி, ஆய்ந்து, அப்போர் குறித்த பல்வேறு செய்திகளை