பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

வற்றிற்குக் கிடைக்காமைக்குப், பழைய ஏட்டுச்சுவடிகளின் சீர்கெட்ட நிலையே காரணம். இது, அந்நூல் பதிப்பாசிரியரால், அவருடைய முகவுரையில்35 தெளிவாக உணர்த் தப்பட்டுளது"36 என விளக்கம் அளித்திருப்பதின் மூலம், அவர் வாதத்தின் வலிவின்மையை உணர்த்தியுள்ளார்.

"பலநூறு ஆண்டுகால இடைவெளியில் தொகை நூல்களில், பிழைபடு இடைச் செருகல்களே இடம் பெறாது தம் பண்டைய வடிவிலேயே பாக்கள், கிடைத்திருக்க வேண்டும். என எதிர்பார்ப்பது அரிதினும் அரிதாம். ஆகவே, அத்தகு குறைபாடு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு, அப்பாக்களையும், அப்பாக்களோடு கொடுக்கப்பட்டிருக்கும் கொளுக்களையும் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்க இயலாது என அறவே மறுப்பது, வரலாற்று நூல்கள் எழுது வதை இயலாததாக ஆக்கிவிடும், ஒரு தவறான வழிகாட்டு நெறியைக் காட்டுவதாகும்"37

புறநானூற்றுக் கொளுக்கள் வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக் கொள்ளத்தக்கன அல்ல எனக் கூறும் திரு.பி.டி. எஸ். அவர்களின் கொள்கைக்கு மேலும் ஒருபடி மேலே சென்று, கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் அளிக்கும் சான்றுகளை வலுவான சான்றுகளாக ஏற்றுக்கொண்டு, புறநானூறு போலும் தொகை நூல்களையும், அவற்றின் கொளுக்களையும் ஏற்க மறுக்கும் வரலாற்றுப் பேராசிரியர் சிலரும் உள்ளனர்.

அத்தகையோரின் தவறான வழிகாட்டு நெறியினை யும் வன்மையாக மறுத்துள்ளார், திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள். இதோ அவர் கூறுவன காண்க.

திரு.வெங்கையர் அவர்கள், 'புறநானூறு எண்ணற்ற சோழ அரசர்களின் பெயர்களை... அறிவிக்கின்றன... ஆனால் அவை தரும் வரலாற்றுச் சான்றுகளையும் குறிப்