பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

புறநானூற்றுக் கொளுக்கள், வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளத் தகுதியில்லாதன என்ற தம் கொள்கையில் திருவாளர் அய்யங்கார் அவர்களும் விடாப் பிடியாக இருப்பவர் அல்லர்.

367ஆம் எண் புறநானூற்றுப் பாட்டின் கொளு இது: "சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப் பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார் பாடியது."

இது குறித்துத் தம் கருத்தினைக் கூறும் திருவாளர், அய்யங்கார் அவர்கள், கொளுவில் கூறப்பட்டிருக்கும் மூவேந்தர் பெயர்கள், பாட்டில் இட்ம் பெறவில்லை எனினும் கொளு கூறும் செய்தி நம்புதற்கு உரியதே என நான் கருதுகின்றேன்” என அவரே கூறுவது காண்க.39