பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழக வரலாறு.கரிகாற் பெருவளத்தான்

"ஒரை" என்ற சொல், தொல்காப்பியர் காலத்தின் மேல் வரம்பாகும் கி.பி. முதலாம் நூற்றாண்டிற்கு முன்னர்த் தமிழில் இடம் பெற்றிருக்க முடியாது என்று தொண்டால், அது ஒரு நடுநிலைமதிப்பீடு ஆகும்.14

இவ்வாறு கூறுவதன்மூலம் 'ஒரை' என்பது தமிழ்ச் சொல். அது, தமிழ் வணிகர் மூலம் கிரேக்கம் சென்றது. ஹொர எனத் திரிந்து, கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அம் மொழியில் இடங்கொண்டு விட்டது, எனக் கொள்வதற்குப் பதிலாக, ஹொர என்ற கிரேக்கசொல், காந்தார்த்துச் சமஸ்கிருத வல்லுநர் மூலம் தமிழகத்திற்கு வந்து ஓரை எனத் திரிந்து, கி.பி. முதல் நூற்றாண்டில்,தமிழில் இடம் பெற்றது எனக் கருதுகிறார், திருவாளர் அய்யங்கார் என்பது தெளிவாகிறது:15

ஆனால், இவ்வாறு, தமிழ் மொழிக்குப் பிறமொழி வரவினை உறுதி செய்யும் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களே பின்வருவனவற்றையும் கூறியுள்ளார்.

'ஆர்மீனிய நாட்டு,அர்ஸசிட் மரபின் முதல் மன்னாகிய வளர்ஷ்க்' என்பான் காலத்தில் (கி.மு.149-121) இந்திய வணிகத் த்லைவ்ர் இருவர், யூப்ரடஸ் ஆற்றின் மேற்குக் கரையில், 'வான்' என்ற ஏரிக்கு மேற்கில், ஒரு புதிய குடியிருப்பை நிறுவி, ஆர்மினிய மொழியில்,'கிஸனி', 'தெமெதெர்' என முறையே வழங்கப் பெறும். கிருஷ்ணன், பலதேவன் ஆகியோர்க்குக் கோயில்களையும் கட்டினர். வட இந்தியாவில் கிருஷ்ணன்,வழிபாடு, பெருமளவில் இடம் பெற்றுளது என்றாலும், பலதேவனையும் ஒருங்கே வைத்து வழிபடும் வழக்கம் காணப்படவில்லை. ஆனால், அவ்விரு கடவுளரையும் 'மாயோன்எ ன்றும், வலியோன்' என்றும் பெயர் சூட்டி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு.முன்னரே வழிபட்டனர் தமிழர். கிருஷ்ண் னுக்கு எண்ணிலாக் கோயில்கள் உள்ள வட இந்தியாவில்,

w