பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்.

வடிவிலும், தோகை" என்ற தமிழ்ச் சொல், 'துக்கி" என்ற வடிவிலும், அந்நாட்டு மொழிகளில் இடம்பெற்றிருந்தன.18

திருவாளர் சாய்ஸ் என்பார், தம்முடைய சொற்பொழிவு ஒன்றில், “கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், சுமேரிய அரசர்களின் தலைநகராய்த் திகழ்ந்து அழிந்து போன, 'உர்' எனும் இடத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேக்குமரத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும், மெசபடோமியப் பள்ளத்தாக்கில் விளங்கிய மிகப் பழைய பெருநகராம் பாபிலோனியாவிலும், அதைச் சூழ உள்ள நாட்டிலும் வாழ்ந்த மக்கள் அணிந்த ஆடை வ்கைகளுள் 'சிந்து' எனும் பெயருடையதொரு ஆடையும் இடம் பெற்றுளது என்றும் கூறியுள்ளார். சிந்து' எனும் இச்சொல், தமிழின் உடன் பிறப்பு மொழிகளாகிய துளுவிலும், கன்னடத்திலும்; ஆடையின் ஒரு பகுதி எனும் பொருளில் சிந்தி' என்ற வடிவிலும், தமிழில் கொடி எனும் பொருளில், 'சிந்து' என்ற வடிவிலும் வழங்கும் சொல்லின் திரிபே ஆகும்.அது,'சிந்தி' என்ற வட இந்திய ஆற்றின் பெயரினின்றும் பிறந்ததும் ஆகாது. பெர்ஷியா (பாரசீகம்) வழியாகச் சென்ற வணிகர் கொண்டு சென்றதும் அன்று. கடல் வழியாகச் சென்ற தமிழ் வணிகரே, அவ்வாடையையும், அச்சொல்லையும் தமிழகத்தினின்று நேரே கொண்டு சென்று, ஆங்கு வழங்கியிருத்தல் வேண்டும். பெர்ஷிய (பாரசீகம்) வழி யாகச் சென்றதாயின், அந்நாட்டு மக்கள் ஒலிப்பில் 'சகரம்', ஹ கரமாக மாறும் இயல்பிற்கு ஏற்ப,'சிந்து' என்ற சொல் 'ஹிந்து' என ஆகியிருக்க வேண்டும். ஆனால், அது, அவ்வாறு திரியாது, தமிழில் உள்ளவாறு 'சிந்து' என்றே ஒலிக்கப் பெறுகிறது. ஆகவே அது தமிழ்ச்சொல்லே; தமிழ் நாட்டினின்றும் சென்றதே என் பண்த உறுதி செய்யும்.19