பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

 இவர் பாடல்களிலிருந்து இவன் வரலாறாக அறியத்தக்கன : சேரர் குடியோடு உறவுடைய அதியர் குடியில் வந்தவன். கரும்பைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவன்,9 பொகுட்டெழினி என்ற மகனைப் பெற்றவன், இக்காலை தர்மபுரி என வழங்கும் தகடூரைத் தலைநகராகக் கொண்டவன்,10 பகைவரால் பற்றற்கரிய திண்மை வாய்ந்தது அக்கோட்டை. அண்டை நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து கொணரும் வழக்கம் உடையவன்.11 தன்னோடு பகைகொண்டிருந்த தொண்டைமானிடம், பகை ஒழியுமாறு ஒளவையாரைத் துாது விட்டவன். மலையமான் திருமுடிக்காரியின் திருக்கோவலுரை வென்றவன்.12 தகடூர்ப்போரில் எழினியை வென்றவன். ஆனால் பெருஞ்சேரல் இரும்பொறையால் கொல்லப்பட்டவன். சிறந்த கொடையாளி, கொடை அளிப்பதில் சிறிது காலம் கடத்துவன் என்றாலும், தவறாது கொடுப்பவன்,13 ஒளவைக்கு உண்டார் உயிரை நெடுங்காலம் வாழவைக்கும் அரிய நெல்லிக்கனியைத் தந்தவன்.14 குதிரை மலைக்கு உரியவன்15 இவ்வளவே.

2. ஆய்

இவனைப் பாடிய புலவர்கள். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்,16 உமட்டூர்க்கிழார் மகனார் பரங்கொற்றனார்.17 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,18 காரிக்கண்ணனார்,19 குட்டுவன் கீரனார்,20 துறையூர் ஓடைகிழார்,21 பரணர்,22 பெருஞ்சித்திரனார், 23 ஆக எண்மராவர்.