பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


செய்தனர். விரைந்தனர், நல்லூர்க்கு புலவர்களைக் கண்ணுற்ற பேகன் மகிழ்ந்து, அவர்கள் தன் புகழ்பாடா முன்பே "புலவர் பெருந்தகையீர்! என்பால் வேண்டும் பரிசில் யாது யாதாயினும் தருகின்றேன், கேண்மின்" எனக் கேட்க, புலவர்கள் "பேக! நீ, இந்நல்லூர் விடுத்து வையாவிக்கோ நகர் சென்று, நின் மனைவியோடு வாழ்தல் ஒன்றேயாம் விரும்பும்பரிசில்" எனக் கூறப், பேகன் தன் மனைவியை அடைந்தான்99.

8. ஓய்மான் நல்லியக்கோடன்

இவனைப் பாடிய புலவர்கள், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்100 புறத்திணை நன்னாகனார்101 ஆகிய இரு புலவர்களாவர்.

தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தையும், செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத் தென்பகுதியையும தன் கண் கொண்ட நாடு. சங்க காலத்தில் ஓய்மானோடு எனப் பெயர் பெற்றிருந்தது. கடற்கரை நகராம் எயிற்பட்டினம்102, கிடங்கில்103, ஆரூர்104, உப்புவேலூர்105, களைக் கொண்ட அந்நாட்டின் தலைநகர் மாவிலங்கை106 அந்நாட்டை ஆண்ட ஓவியர் குடியில் சிறந்தவன் நல்லியக்கோடன்107, புறம் : 376ன் கொளு அவனை வில்லியாதன் என்றும் அழைக்கிறது.

நல்லியக்கோடன் நல்ல கொடையாளி,அஞ்சி முதல் பேகன் வரையான ஏழு வள்ளல்கள் காலத்துக்குப் பிற்பட்டவன்; அவ்வெழுவர் செய்த கொடைவளம் அவ்வளவையும் தான் ஒருவனாகவே இருந்து ஏற்றுக்