பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சான்றெண் விளக்கம்



1. “வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும், சுரும்புண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரியும், கறங்கு மணி
வாலுளைப் புரவியொடு வையகம் மருள
ஈரநன்மொழி இரவலர்க் கீந்த
அழல்திகழ்ந் திமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக்கைக் காரியும், நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமலர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும், மால்வரைக்
கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகனும், கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும் பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் எனவாங்கு,